(472)
என்று இவ்வாசிரியர் ஓரிடத்தில் உதகரிக்கின்றார்.
மறவர்மகளைக் கொள்ள எண்ணி ஓரரசன் தூதுவிட அத்தூதனை இகழ்ந்து மறுக்கும் செய்தியைக் கூறுவதும் கலம்பக உறுப்பினுளொன்றாக மறமென்று வழங்கப் பெறுவதுமாகிய இரண்டு செய்யுட்கள் (180, 643) இவர்வாக்கில் வந்துள்ளன; அவையிரண்டும் மகட்பாற்காஞ்சி யென்பதன்பாற்படும்.
| “உழிஞை தானே மருதத்துப் புறனே” |
(தொல்.புறத்.9)
என்பதன் உரையில் நச்சினார்க்கினியர் ‘மதில் பெறும்பான்மையும் மருத்த்திடத்தாதலானும்’ என்றுரைத்து அதற்குரிய மேற்கோள்களை எடுத்துக் காட்டினர். அதனை யுணர்ந்த குமரகுருபரர்,
| “மன்றலம் பணைசூழ் மருத வேலிப்..........கமலை” |
(593)
| “இறும்போது பயக்கு நறும்பணை.............காசிமா நகரம்” |
(656)
என்பவற்றில் மருத்ததையும் மதிலையும் ஒருங்கே அமைந்தனவாக்க் கூறினர்.
தும்பைத்திணைப் பொருள் அதிரப் பொருதல் என்று கூறுவர்;
| “அதிரப் பொருத தளிப்பகை ஞன்றமிழ் நீர்நா டாளாமே” |
(32)
என்பதில் இவ்வழக்கை அமைத்தனர். அங்ஙனம் பொவார் தும்பைப்பூவையேனும் மாலையையேனும் முடித்துக் கொள்ளுதல் மரபு; இம்மரபை,
| “முரண் மறலி, தும்பை முடிச்சூ டினும்” |
(247),
| “தும்பைத் தலைச்சம் மயிர்ச்சிகை” |
(441)
| “தோகை யுயிர்முடிப்பான் றும்பைமுடித் தான்மதவேள்” |
(609)
என்னும் இடங்களில் எடுத்தமைத்தனர்.
இவ்வாறு போரும் போர்க்களத்தில் படையின் மிகுதியால் தூளிபடலம் எழும்; அதனைச் சேனாபராகமென்பர். அங்கயற்கணம்மை அம்மனை யாடும்பொழுது சோலையிலேயுள்ள வண்டுகள் எழ அச்செயலால் மலரிளுள்ள மகரந்தப்பொடி