(351)
என்பவற்றிற் காணப்படுகின்றது.
போர்க்களத்தில் தோல்வியுற்று ஓடினோரையும் மயிர்குலைந்தோர் முதலியோரையும் கொல்லுதல் அறமன்று; இதனை நச்சினார்க்கினியர், ‘சிறப்புடை அரசியலாவன, மடிந்த உள்ளத்தோனையும் மகப்பெறாதோனையும் மயிர்குலைந்தோனையும் அடி பிறக்கிட்டோனையும் பெண்பெயரோனையும் படையிழந்தோனையும் ஒத்தபடை யெடாதோனையும் பிறவும் இத்தன்மை யுடையோரையும் கொல்லாது விடுதலும் கூறிப் பொருதலும் முதலியனவாம்’ (தொல். புறத். 10, உரை) என்று உணர்த்துவர். இம்மரபை இவ்வாசிரியர்,
| “தாரோ டவிழ்ந்திட்ட...........தாலிக்கு வேலி” |
(440)
என்பதிற் புலப்படுத்துவர்.
புறமுதுகிட்டோரைக் கொல்லாது விடுத்தல் தழிஞ்சி யென்னுந் துறையின் பாற்படும் (பு.வெ.55);
| “ஒட்டிய......................யாடல்செயும்” |
(385)
என்பதில் பின்னிட்டவரை முருகக் கடவுள் கொல்லாது விடும் செய்தியை இவ்வாசிரியர் உரைத்தார். “முன்னரே உங்களுடைய கண்ணாகிய கணையினால் விளைக்கும் போரில் தோல்வி