(609)
என்பவற்றில் உணர்த்தினார்.
போர்க்களம் வென்றோருக்கரிய தென்னும் செய்தியை,
| “செயல்பாய் கடற்றானை செங்களங் கொளவம்மை |
| திக்குவிச யன்கொண்டநாள்” |
(56)
என்பதில் வெளிப்படுத்தினார்.
தோற்றோரது கொடியை வென்றோர் கைக்கொள்ளும் வழக்கை,
| “.....................கருப்பு வில்லியைக் காய்ந்தநாட் |
| கைப்ப தாகை கவர்ந்து கொண்டதொர் காட்சி” |
(154)
என்பதிலும், வெற்றிகொண்டோர் தாம் வென்ற இடத்தை எல்லைக்கல் நிறுவி வரையறுக்கும் முறையை,
| “இமயத் தொடும்வளர் குலவெற் பெட்டையும்..........புரந்து” |
(40)
என்பதிலும் அமைத்துள்ளார். வென்றோர், போர்க்களத்தில் இறந்தோருடைய தசை முதலியவற்றைப் பேய்கள் உண்ணும்படி செய்து களவேள்வி இயற்றுதலைப் பிறப்பொருள் நூல்களும் பரணி நூல்களும் எடுத்துக் கூறும்; இவர்,
| “....................அவுணர் படக்கள வேள்விசெயாக் |
| கொற்ற மகட்புண ருஞ்சுடர் வேலவ” |
(387)
| “சமர்விளை யாடிச் செங்கள வேள்வி செயும்” |
(437)
என இரண்டிடங்களில் அதனைக் குறித்தனர்.
போரில் வென்றோர் பிறகு நன்னீரில் நீராடுதலை மண்ணுமங்கல மென்னும் துறையிலமைப்பர் (பு.வெ.224);
| “எண்டிசை யுந்தனி கொண்டு புரந்து.......வாடு மடப்பிடி” |
(40)
என்பது அத்துறையின்பாற் படுவதேயாகும்.