50குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

    போரில் தோற்றோர் காட்டுக்குச் சென்று மறைதலும் (13) பகையரசனுக்கு அஞ்சித் திறையிடுதலுமாகிய (13, 51) செய்திகளை இவர் உரைத்துள்ளார். போரில் இறந்த வீரர்கள் சூரிய மண்டலத்தை ஊடுருவிச் சென்று வீரசுவரக்கம் பெறுவரென்பது நூற்கொள்கை. இவ்வாசிரியர்,

“ஒண்பருதியுதலிகிழித்தோடுங்கடற்றானை”
(382)
“சமரிற்பட்டவர்........தாமரை நாயகன் வயிறு கிழித்துத்
 தந்தொழி றலைநின்றாங்கு”
(386)
என இச்செய்தியை அறிவித்தனர்.
    தடாதகைப் பிராட்டியின் திக்குவிசயத்தை வர்ணிக்கும் பகுதியில், “அப்பிராட்டியின் படையிலுள்ள மனித வீரர் தேவர்களாற் கொல்லப்பெற்று வீரசுவர்க்கத்தை அடைந்து தேவமகளிரைச் சார்ந்து இன்புற்றனர்; அவர்கள் உயிர் நீப்பினும் பகைவருடைய பொருள்களைக் கவர்வதை ஒழிந்திலர்” (39) என்னும்கருத்துப்படவரும் செய்யுளிலும்,"முருக்க் கடவுள் அசுரர்களோடு போரிடுகையில் இறந்த அசுரர்கள் வீரசுவர்க்கம் புகுந்து தேவராகித் தேவர் நுகர்பவற்றைத் தாமும் நுகர்வாராயினர்” (382) என்னும் கருத்துப்படவரும் செய்யுளிலும்,போர்க்களத்தில் இறந்துபட்ட அசுரர்கள் தேவராய் வீரசுவர்க்கத்தை யடைந்து, தாம் முன்னர் அசுரராயிருந்தமையை மறந்து அசுரர் கூட்டத்தை அழிப்பாயாக வென்று முருகக் கடவுளை வேண்டுவாராயினர்” (386) என்னும் கருத்துப்படவரும் செய்யுளிலும் போரில் இறந்தோர் வீரசுவரக்க மெய்தும் செய்தியை நயம்பெற அமைத்துள்ளார்.

    இலக்கணத்தாலும் இலக்கிய அமைதியாலும் உணரந்த இத்தகைய வேறு சில புறப்பொருட் செய்திகளையும் இவர் செய்யுட்களிலே காணலாகும்.

யாப்பிலக்கணவமைதி

    பாவும் பாவினமுமாகிய யாப்புக்களைப் பொருட் சிறப்பமையப் பாடுவதில் இவர் வல்லவரென்பதற்குச் சிதம்பரச் செய்யுட்கோவை ஒன்றே சான்றாகும். மதுரைக் கலம்பகம், காசிக் கலம்பகமென்னும் இரண்டனுள்ளும் பாவும் பாவினமுமாகிய செய்யுட்கள் பல அமைந்துளவெனினும்,சிதம்பரச் செய்யுட்கோவை யாப்பிலக்கணத்துக்குரிய இலக்கியமாகவே செய்யப்பெற்றதாதலின் அதன்கண் பாவுக்கும் பாவினங்களுக்குமுரிய