இலக்கண அமைதியை நன்றாகக் காணலாம். அந்நூற் செய்யுட்களின் பின் உள்ள குறிப்புக்கள் அவ்விலக்கண அமைதியைத் தெளிவாகப் புலப்படுத்தும். அந்த நூலைப்போலப் பாப்பாவினம், திருவலங்கற் றிரட்டு என்னும் இரண்டு நூல்கள் உள்ளன.
இவர் பாடிய செய்யுட்களுள் வெண்பா 189; வெண்டாழிசை 5; வெண்டுறை 5; வெளிவிருத்தம் 2; ஆசிரியப்பா 41; ஆசிரியத்தாழிசை 2; ஆசிரியத் தறை 4; ஆசிரிய விருத்தம் 298; கலிப்பா 38; கலித்தாழிசை 7; கலித்துறை 96; கலிவிருத்தம் 6; வஞ்சிப்பா 2 வஞ்சித்தாழிசை 1; வஞ்சித்துறை 3; வஞ்சிவிருத்தம் 4; மருட்பா 6.
சிதம்பரச் செய்யுட் கோவையில் பலவகைத் தொடைகளும் இருத்தலைக் காணலாம். திரிபு, வழியெதுகையாகிய நயங்கள் இவர் செய்யுடகளில் அங்கங்கே பொருந்தியுள்ளன. திரிபு அமைந்த செய்யுட்கள் வருமாறு: 106, 107, 112, 114, 131, 140, 152, 174, 183, 186, 200, 308, 309, 317, 318, 450, 459, 465, 467, 481, 547, 565, 570, 595, 623, 630, 631, 651, 655, 658, 678, 684,687, 693.
வழியெதுகை யமைந்த செய்யுட்பகுதிகளிற் சில வருமாறு:
| “பிள்ளைமையின் வள்ளன்மை கொள்ளுமொரு பாண்டிப்பிராட்டி” |
(10), | “தொந்தி சரிந்திட வுந்தி கரந்தொளிர் சூலுடையால்” |
(19), | “கங்குண்ம தங்கய மங்குள டங்கவி டுங்காமன் |
(23), | “இரைத்துத் திரைத்து நுரைத்து” |
(27), | “மூதண்ட வேதண்ட கோதண்ட மோடு” |
(34), | “வாளிகள், கூளிகள், காளிகள், ஞாளியி லாளியென” |
(41), | “விக்கிடக் கக்கிடத் தொக்கிடர்ப் படுதி” |
(67), | “கொடிமுல்லை விடுகொல்லைக் கடிமுல்லை வெள்ளைப்பள்ளை” |
(108), | “தோலாத முத்தமிழ் நாவா மூவா மாவாமச் | | சூர்வே ரறத்தொடு வேலாநூலா நூலோதும்” |
(378), | “சோதி யானணி பூதி யானுமை பாதியான்” |
(535), | “கரும்புஞ் சுரும்பு மரும்பும் பொரும்படைக் காமர்வில்வேள்” |
(554). இவ்வாசிரியர் செய்யுட்களில் அடுத்தடுத்து முரண்டொடை அமைந்திருக்கும். இவருடைய நடையின் தனிச்சிறப்புக்களுள் இதுவும் ஒன்று. முரண்டொடை யமைந்த இடங்களிற் சில வருமாறு: |