52குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

“குனிய நிமிர்தரு செரு”
(4),
“வெண்புயலுங் கரும்புயலும்”
(8),
“செஞ்சூட்டு வெள்ளோதிமம்”
(9),
“செங்கயல் கிடக்குங் கருங்கட் பசுந்தோகை”
(17),
“பெருநா ணெய்தச் சிறுநா ணொலி செய்யா”
(39),
“கார்க்கோல நீலக் கருங்களத் தோடொருவர்
  செங்களத் தேற்றலும்”
(99),
“எய்யாது நின்றொருவ னெய்வதுவு மிளையாட....செல்வனாரே”
(122),
“சிறுமதிநம் பெருமதியி னுகப்படருங் காலம்”
(159),
“கண்டமுங் காமர் மெய்யுங் கறுத்தவர் வெளுத்த நீற்றர்
 எண்டரு மதுரை யிற்சிற் றிடைச்சிபே ரிடைச்சி யென்பீர்”
(166),
“நெடியவன் முதற்றேவர் குறுகி நிற்பவும்”
9413),
“சிற்றம் பலங்கண்டு பேரம் பலத்தைச்செய் யாதவரே”
(459),
“இடம்புரி சுரிமுக வலம்புரி”
(478),
“கருமிடற்றன் செஞ்சடையன் வெண்ணீற்ற னென்னும்
 மழுவலத்தன் மானிடத்த னென்னும்”
(508),
“செவ்வாய்க் கருங்கட்பைந் தோகைக்கும் வெண்மதிச்
   சென்னியற்கும்”
(553),
“வலம்புரி யென்னவாங் கிடம்புரி திங்கள்”
(699).
    இவற்றில் சொன் முரண், பொருண் முரண் என்னும் இரு வகையும் விரவி வந்தது காண்க.

    இவர் பாடிய இரண்டு பிள்ளைத் தமிழ்களிலும் இலக்கணப்படியே பலவகைச் சந்தப்பாக்கள் அமைந்துள்ளன; கலம்பக மிரண்டவனுள்ளும் புயவகுப்பு உள்ளது; இவற்றையன்றி வேறிடங்களிலும் இவர் சந்தச் செய்யுளை அமைத்துள்ளார். இந்தச் சந்த அமைப்பைக் கொண்டு சில திருத்தமான பாடங்கள் கண்டுணர்ந்து அமைக்கப்பெற்றன. அருமையாக வழங்கும் ‘தய்ய’ என்னும் வாய்பாட்டுச் சந்தத்தை இவர் வாக்கிற் சில இடங்களிற் காணலாம்.

“ சிகர வடவரை குனிய நிமிர்தரு
  செருவி லொருபொரு வில்லெனக் கோட்டினர்”
(4),
“குமிழுமறிந்தவிழி நவ்வியைக்”
(352),
என்னும் செய்யுட்களில் ‘வில்லெனக்’ என்பதும் ‘நவ்வியைக்’ என்பதும் ‘தய்யனத்’ என்னும் சந்தமாக அமைதல் காண்க.

“கரைபொரு திரங்கு கழிதொறு மிருந்து
 கயல்வர வுறங்கு புள்ளீரே”
(134),
என்பதில் ‘தய்யானா’ என்னும் சந்தம் வந்தது.