ஆராய்ச்சி53

    சிறப்புப் பெயர்களுக்கு ஏற்றபடி சந்தத்தை அமைத்துப் பாடுவதில் இவர் திறமை பெற்றவர். சித்திவிநாயகன் (5), முத்துக் குமாரன் (6), சவுந்தரமாறர் (115), கடம்பாடவிச் சுந்தரர் (146), மதுரையழகிய சொக்கர் (198), வேளூர் வயித்திய நாதன் (351), தையல் (352), முப்பத்து மூவர் (13), முப்பத்து முக்கோடி தேவர்கள் (359) என்னும் பெயர்களுக்கேற்ற சந்தத்தை அமைத்துப் பாடுஞ் செய்யுட்கள் ஓசை நயமும் பொருட் செவ்வியு முடையன.

அணியிலக்கணவமைதி

    இவர் காலத்தில் வடமொழியின் தொடர்பால் அணியிலக்கணம் தமிழில் விரிவடைந்தது. வடமொழியிலும் தென்மொழியிலும் கற்பனைத் திறம்படப் பாடும் புலவர்கள் மலிந்தனர். இயற்கையின் எழினலங்களைக் கண்டு உள்ளத்தை உள்ளவாறே கவிதையிலமைத்துக் காட்டும் சங்கப் புலவர்களுடைய பாடல்களுக்கும் பிற்காலத்துப் புலவர் பாடல்களுக்கும் உள்ள வேற்றுமைகளில் இது தலைமையானது. இல்பொருளுவமை, உயர்வு நவிற்சி. தற்குறிப்பேற்றம் முதலிய அணிகளைப் புலவர்கள் மிகுதியாகத் தங்கள் செய்யுட்களிலே அமைக்கத் தொடங்கினர். கண்ணிற் கண்ட காட்சிகளைக் கருத்தால் விரிவுபடுத்திக் கவியிலமைக்கும் இப்புலவர்களுடைய செய்யுட்களில் இயற்கையோடு ஒத்த நிகழ்ச்சிகளையும் காட்சிகளையும் காணாவிடினு, இவர்களுடைய கற்பனையின் அடிநிலையில் இயற்கைக் காட்சிகள் இருப்பதை உணரலாம். மரங்களை உலகிலே கண்ட இப்புலவர் தம் கருத்தினால் அவற்றை வானளவும் வளரவிட்டுக் கற்பகத்தோடு ஒன்றி நிற்கும்படி கற்பிக்கின்றனர்.. இத்தகைய வருணனைகள் கவிகளுக்கென்றே அமைந்த ஒரு கற்பனையுலகத்தைப் படிப்போருடைய அகக் கண்முன் தோற்றுவிக்கின்றன.

உயர்வுநவிற்சி

    மருதநிலத்து மகளிர் களிமண்ணையும் சிறுகற்களையும் வைத்துக்கொண்டு சிற்றில் விளையாடுதலையும் சிறுசோறடுதலையும் உலகிற் காண்கின்றோம். இப்புலவருடைய கற்பனையிலே, அவர்கள் மாணிக்கமாகிய தீயை அடுப்பிலே வைத்துப் பவள விறகை மூட்டித் தேனை உலைநீராகப் பெய்து சங்காகிய பானையில் முத்தாகிய அரிசியை யிட்டுச் சிறுசோறாக்கு