54குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

கிறார்கள் (25); விளையாடும் மகளிர் சிறிய முற்றிலால் வாரிக்குவித்த மணிக்குவியல்கள் ஆகாய வீதியளவும் உயர்ந்து வழியை அடைத்து நிற்க வையையாறு தடைப்பட்டுத் தேங்கி நிற்பதனால், அத்தேக்கத்தில் சூரியன் பொற்பரிசிலாகவும் பிறை சிறு தோணியாகவும் நட்சத்திரங்கள் சிறு மிதப்புக்களாகவும் தோற்றுகின்றன (59); ‘அந்தப்பெரு வெள்ளத்தினிடையே மணிக்குவியலைக் குவித்த மகளிர் எங்கே யிருந்தனர்? உலகம் என்னாயிற்று?’ என்று கேட்கும் உரிமை நமக்கு இல்லை; கவிஞர்களின் கனவு அது. கனவிலே தொடர்பையேனும் தக்க காரணத்தையேனும் கண்டுணர முடியாதன்றோ? அவ்வாறே கவிஞருடைய கற்பனை நிகழ்ச்சிகளை இந்த உலகத் தோற்றத்தோடு ஒப்பு நோக்கப்புகின் அந்தக் கற்பனையின் நயத்தைச் சுவைக்க இயலாது.

    குமரகுருபரர் அமைக்கும் மதுரையிலே உள்ள சோலைகள் வானுலகளவும் உயர்ந்து நிற்கின்றன; பெண்களின் கூந்தலிலே வாசஞ் செய்யும் வண்டுகள் அந்தச் சோலைகளிலே புகுந்து உழக்குவதனால் அங்குள்ள மலர்களின் தாதுஉக, அதனால் ஆகாயகங்கை தூர்கின்றது; அச் சோலையிலேயுள்ள முசுக்கலை தனக்கருகே தோற்றும் சந்திரனிடத்துள்ள முயலின்மேல் துள்ள அதன் ஆரவாரத்தைக்கண்டு அஞ்சிய மேகங்கள் மருத நிலத்திலே உள்ள நெற்போர்களின் மேல் தங்குகின்றன; அங்கே கள்ளைக் குடித்து மயங்கி நிற்கும் மள்ளர் அம்மேகங்களை எருமக்கடாவென்று கருதி அவற்றைத் தம்பாலுள்ள எருமைக கடாக்களோடு சேர்த்துப் பிணையலிட்டுக்கடாவடிக்கின்றனர்    (28).

    வானளவும் ஓங்கிய கரும்பு கற்பகவனத்திடையே சென்று வளர அதனை ஐராவதம் உண்கின்றது; அவ்வாறே மதுரை வயலிலே முளைத்த நெல் வானுலகத்திற் கதிர்விட அதனைக் காமதேனு தின்று கடைவாய் குதட்டுகின்றது (50); கமுகும் கரும்பும் சூரியமண்டலத்தளவும் உயர்ந்து சூரியனது தேரின் இருபுறத்தலும் நின்று அதற்கு அலங்காரம் செய்கின்றன (423); பூமியிலே வளரந்த கமுகு வானுலகத்தில் உலாவரும் இந்திராணிக்கும், இந்திரனது திருவோலக்கத்தில் நடமாடும் மகளிருக்கும் கவரிவீசுகின்றது (58, 374); இப்படியே குமரகுருபரர்கட்டும் மதில் வானுலகுக்கு ஓர் ஏணியாகவும் கற்பகத்துக்கு வேலியாகவும் அமைகின்றது (373, 566); இவர் கற்பனையாலமைக்