ஆராய்ச்சி59

படம் விரித்து ஆட அப்பாம்பைத் தான் சூடும் காந்தளென்று எண்ணி முருகக் கடவுள் அதனைப் பற்றுதற்குச் செல்ல அது வெருண்டோடியது; ஏமாற்றமடைந்து நின்ற முருகக் கடவுள் சிவபிரானது முடியிலுள்ள பிரமன் தலையைக் கண்டு, இயல்பாகவே அது நகுதலையாக இருப்பதை மறந்து தம் செயல் கண்டு நகைப்பதாகக் கருதி, “என்னைப் பார்த்தா சிரிக்கின்றாய்? முன்பு குட்டுப் பட்டதை மறந்து விட்டாயோ?” என்று கோபத்தோடு கூறி இதழதுக்கினர்         (403).

    சிவபெருமான் திருமுடியில் நிகழும் கற்பனை நிகழ்ச்சி ஒன்று வருமாறு; அத்திருமுடியில் உள்ள பாம்பு தன் சிறுமூச்சு விடுவதனால் பெருங்காற்று ஒண்டாக அதனால் அங்குள்ள கங்கையிற் பேரலைகள் உண்டாயின; படம்விரித் தாடும் அப்பம்பின் கண்ணிலிருந்து உண்டாகிய அழல் கொளுத்தியதால் கங்கைவெள்ளம் சுருங்கியது; அப்போது நெற்றிக்கண்ணிலிருந்து எழுந்த அனற்கொழுந்து சந்திரன் மேற்பட அஃது உருகியதால் அமுதம் பெருகி அக்கங்கையில் உண்டாகிய வெள்ளக் குறைவைப் போக்கியது         (466).

    மீனாட்சியம்மை ஊசலாடும்போது அண்டபகிரண்டமும் அசைந்தனவாம். ஏன்? இவர் கூறும் கற்பனை வருமாறு;

    பாடல்பாடி அம்பிகை ஊசலாடுங்கால் அப்பாட்டைக் கேட்டும் ஊசலாட்டைக் கண்டும் சிவபெருமான் திருமுடி யசைத்தனர்; அப்பொழுது அத்திருமுடியிலுள்ள ஆதிசேடன் அசைந்தனன்; அதனால் பூமியசைந்தது; சராசரங்கள் யாவும் அசைந்தன         (98).

தற்குறிப்பேற்றம்

    இயல்பாகவுள்ள காரணமொன்றிருப்ப வேறு காரணத்தைக் கற்பித்துக் கவிஞர் அமைக்கும் செய்திகள் அவர்களுடைய கற்பனைத்திறனை உணர்த்துவதற்குரிய அடையாளங்களுள் ஒன்றாகும். இங்ஙனம் வேறொரு குறிப்பை ஏற்றிக் கூறுவதைத் தற்குறிப்பேற்றவணி யென்பர். இம்முனிவருடைய செய்யுட்களில் அவ்வணி பலவிடங்களில் அமைந்துள்ளது.

    ஸ்ரீ மீனாட்சியம்மை உதித்தற்குரிய பெருமை சந்திரவம்சத்திற்கு உண்டானதை உன்னிச் சூரியன் முழுவெப்பத்துள் மூழ்கினான் (13) என்பதில், சூரியனது வெப்பத்திற்குக் கவிஞர்