வேறு காரணம் அமைக்கின்றார். மேருமலையைச் சிவபெருமான் வளைத்தனரென்னும் செய்தியை இவர், “தியாகர் தடம்புயத்தின் சீர்பெற்றிலேமென்று நாணால்வணங்கிச் சிலையெனவும் பேர்பெற்றது” (310) என்று தம் குறிப்பையேற்றிச் சிலேடை நயமும் பொருந்தக் கூறுகின்றனர். வெண்ணிலாவென்பதைச் சந்திரனது கிரணமென்று நாம் எண்ணியிருப்ப, இவர் அதனை மருத்து, “சிவபெருமான் சடைமேலுள்ள சந்திரன், அன்னப் பறவையின் உருவெடுத்தும் அச்சடாமுடியை அடைய முடியாத பிரமதேவரை நோக்கி நகைக்கும் நகையையே இவ்வுலகம் அறியாமையால் நிலாவென்று சொல்கின்றது” (337) என்பர்; இங்ஙனமே சிவபெருமான் அணிந்த நகுதலை பிரமனைப் பார்த்து நகைப்பதாக மற்றோரிடத்திற் கூறுவர் (636).
தலச் செய்திகளைத் தற்குறிப்பேற்ற அணியமையக் கூறும் செய்யுட்கள் பல:
திருவாரூரிலுள்ளார் யாவரும் சிவகணங்களாகத் தோற்றுவரென்பது புராணவரலாறு; அவர்கள் தம் கையிலே மழுப்படையை வைத்திருப்பது, “இங்கே பிறந்தார் இனிப்பிறவார்” என்று மழுவேந்திச் சத்தியம் செய்வதுபோல விளங்கும் (336) என்பர்; “திருவாரூர் ஸ்ரீவன்மீகநாதர் ஒரு புற்றிற் குடிபொண்டார்; பாம்பைப் பூணாக அணிந்தார்; விடத்தையும் உண்டார்; இவ்வாறு அவர் அச்சமின்றிப் பாம்பு முதலியவற்றோடு பழகி வருவது தம் பக்கத்தில் ஒரு மயில் இருக்கும் துணிவு கொண்டே” (342) என்பர்.
தியாகேசர் இருந்தாடழகரென்னும் திருநாம்முடையவர். அவர் இருந்தபடியே நடனம் செய்தருள்வதற்கு இரண்டு காரணங்களை இவர் கற்பிக்கின்றனர்; “திருவடி தூக்கி நடனம் புரியின் திருமால் முன் திருப்பதங் காணாது வருந்தியவர் ஆதலின் இப்போது தூக்கிய திருவடியைத் தரிசித்து நான் திருவடிகளைக் கண்டேனென்று பிரமதேவனைப் போலப் பொய்ச்சூள் புகல்வாரென்று கருதியோ, முன் உதைபட்ட யமன் தூக்கிய திருவடி கண்டு அஞ்சுவனென்று கருதியோ” (325) என்று வினாவு முகத்தால் அவவிவரண்டு காரணங்களையும் புலப்படுத்துகின்றனர்.
இருந்தாடுதற்கு இவர் காரணங் கூறின், “நடராசப் பெருமான் ஒரு திருவடி தூக்கி நின்று நடனம் செய்தருளு
|