ஆராய்ச்சி63

கூறுகின்றார். “ஒன்றே யுடம்பங் கிரண்டே யிடும்பங்கு” (110), “அருமையுடம் பொன்றிருகூறு” (117), “இருகூற்றுருவம்” (550), “ஒரு பாதி சத்தியொரு பாதி யும்பரம சிவமெனத் தொகுத்து வைத்தவவி முத்த நாயகர்” (638) என்று இவர் அம்மூர்த்தியைப் பாராட்டுவர். ஊடலும் கூடலும் உடம்பொன்றிலே நிகழ்வது வியப்பு (126) என்பர். அம்மூர்த்தியின்பால் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட இயல்புகள் உளவாதலைச் சில இடங்களிற் கூறுகின்றார். “கண்டமட்டு மிருண்டு பாதி பசந்து பாதி சிவந்துளார்” (661) என்று நிறத்தில் உள்ள மாறுபாட்டைக் கூறினார். இன்ன நிறத்தால் இன்னார் பாகமிது வென்று தெரியாத மயக்கமும் ஏற்படுவதுண்டாம்; “சிவ பெருமானது வலப்பாகம் உமாதேவியார் திருவிழிதோய்ந்து கருநிறம் பெற்றும், சிவபெருமானது பார்வை தோய்வதனால் தேவியாருக்குரிய இடப்பாகம் வேறு நிறமாகியும் தோற்றுவதால் இன்னபாகம் இன்னாருடையதென்று புகலொணாத நிலை உண்டாகின்றது” என்று இவர் கூறுவர் (311). நிறத்திலே முரண்படுவதோடு தொழிலிலும் முரண்படுதலை இவர் இயம்புகின்றார்; “ஒரே காலத்தில் ஒரே உருவத்தில் இடப்பாகம் முப்பத்திரண்டு தருமங்களையும் வளர்ப்ப வலப்பாகம் இரத்தல் இந்த உலகத்தில் இல்லை; ஆயினும் இந்த வியத்தகு காட்சியைத் திருவாரூரிலே கண்டோம்” (316) என்பதில் அம்முரண்பாட்டைக் கூறுதல் காண்க. உமாதேவியார் இடப்பாகத்திலிருந்து அறம்புரியும் செய்தியை, “தியாகேசருக்குப் பெருமையோ பெயரோ இயல்பாக வந்தனவல்ல; அவர் வரந்தரும் வரத ஹஸ்தமுடையவரென்று கூறுவது உபசாரம்; அந்த வரதம் வைத்த திருக்கரம் உமாதேவியாருடையது; அங்ஙனமே அத்தேவியார் அறம் வளர்த்தமையாலேயே தியாகரென்னும் திருநாமம் அவருக்கு உண்டாயிற்று” (322) என்னும் கருத்துப்பட வரும் செய்யுளிற் குறிப்பிக்கின்றார். இவ்வாறு ஒன்றுக்கொன்று மாறுபட்ட இரத்தலும் ஈதலுமாகிய தொழில்களை ஒரு திருவுருவத்தின் பப்பாதியிலே காணும் இவர், அவ்வாறே மாறுபட்ட படைத்தலும் அழித்தலுமாகிய தொழில்களையும் அவற்றிலே காண்கின்றார்; “இப்புவனங்களை உருப்பாதியிற்படைத்து ஓர் பாதியிற்றுடைத்து” (607) என்பது காண்க.

    இலக்கணக் கவிஞராகிய இவருக்கு ஒரு சந்தேகம் வந்து விடுகின்றது; ‘சிவபெருமானுக்கும் உமாதேவியாருக்கும்