64குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

உருவொன்று; அவ்வுருவை ஒருத்தனென்று சொல்வதா? ஒருத்தி என்பதா?’ என்று யோசிக்கின்றனர்; சொல்லிலக்கண முழுவதும் நினைத்துப் பார்க்கின்றார்; அப்போது,

“ஓருவ ரென்ப துயரிரு பாற்றாய்ப்
  பன்மை வினைகொளும் பாங்கிற் றென்ப”
(நன். 289),
என்னும் சூத்திரம் ஞாபகத்திற்கு வருகின்றது; “ஆஹா! இந்தச் சொல்லை இலக்கண நூலாற் பெறாவிடின் எவ்வளவு திண்டாட்டம் நேரும்; இந்த ஒருவரென்னும் சொல்லும் இதன் இலக்கணமும் அர்த்தநாரீசுவரத் திருவுருவத்துக்காகவே ஏற்பட்டனவென்றல்லவோ தோற்றுகின்றது!” என்று வியக்கின்றார். அவ்வியப்பின் முடிவில் தோற்றிய செய்யுள் வருமாறு:

“அருவருக்கு ....................... சொல் கேனே”
(534).
    சொல்லிலக்கணம் இவருக்குச் சமயத்தில் உபகாரம் செய்ததுபோல அணியிலக்கணம் மற்றொரு சமயத்தில் இவரைத்தர்ம சங்கடத்திலிருந்து பாதுகாக்கின்றது; அங்கே இவருக்குச் சிலேடை துணையாக நிற்கின்றது. “தேவிக்கும் எம்பெருமானுக்கும் ஒரே திருவுருவம் உள்ளது; அங்ஙனம் ஒன்றுபட்ட திருவுருவத்தை நாம் எவ்வாறு விளித்துப் பாடுவது? தாயேயென்றால் என்றெருமானைச் சாராது; தந்தையேயெனின் உமாதேவியாரைச் சாராது; அம்மையப்பாவெனின் ஒருமைபோய் இருமையாகுமே” என்று யோசிக்கிறார்; அப்போது இருவருக்கும் பொருந்தும்படி ஏதாவது சொல்லலாமே என்று ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருகிறார்; அந்த முடிவு பின்வரும் பாட்டிலே வெளிப்படுகின்றது:

“செவ்வாய்க் கருங்கட்பைந் தோகைக்கும் வெண்மதிச் ............
  எந்தாயென்று பாடுதுமே”
(553).

நிந்தையும் துதியும்

    ஒரு பொருளைப் புகழ்வதுபோலப் பழித்தலும் பழிப்பது போலப் புகழ்தலும் முறையே ஸ்துதிநிந்தை, நிந்தாஸ்துதியென வழங்கும். இவ்வரண்டும் இலேசவணியின்பாற்படும், செல்வமுடையோர் இயல்புகளைக் கூறவந்த இவர்,

“இவறன்மை கண்டு முடையாரை யாரும்
  குறையிரந்துங் குற்றேவல் செய்ப”
(217),
என்று உலக இயலைபைக் கூறினார்.
அவ்வியல்பை நியாயமெனக் காட்டுவார்போல,