(226)
என்றார்;
அந்த வெற்றுரைக்கு எத்தகைய வலியுடைமை யுண்டாக முடியுமென்று நாம் யோசிக்கும்போதே,
| ”.................................சொற்றநீர் |
| நில்லாத பென்னென்று நாணுறைப்ப நேர்ந்தொருவன் |
| சொல்லாமே சூழ்ந்து சொலல்” |
என்று பின்பாதிச் செய்யுளையும் கூறி நம்மைத் திகைக்க வைக்கின்றார்.இவையிரண்டும் ஸ்துதி நிந்தையின்பாற்படும்.
சிவபெருமான் பதஞ்சலி வியாக்கிரபாதருக்கு அருளியதையும், கண்ணப்பருக்கு அருளியதையும், உமாதேவிரைக் கொண்டு முப்பத்திரண்டு தருமங்களை வளர்ப்பித்ததையும் இழிவுக் குறிப்புப்படக் கூறுகின்றார் (463).
காசியிலே இறப்பவர் சாரூபம் பெறுவரென்னும் செய்தியை இவர் அகப்பொருள் நயமும் அணிநலமும் பெறப்பலவகையிலெடுத்தமைக்கின்றார். “இந்தக் காசியிலே முத்தியை விரும்பி வந்தவர்களுக்கு முடைத்தலையும் எலும்பும் சாம்பலுமே கிடைக்கின்றன; வேறு ஒன்றும் சித்திப்பதில்லை போலும்; கேவலந்தான் பலமாகப் பலித்தது” (680) என்பதில் சொல்லளவிலே இகழ்ச்சி தோற்றினும் சாரூபமும் முத்தியும் பெறுவரென்பதே கருத்து.
| “இன்பத், |
| தேனென் றடைந்தவர்க் குண்ணக் கிடைப்பது தீவிடமே” |
(682).
என்பதிலும் சாரூப்ப் பேற்றையே கூறினார். இங்ஙனம் வருவனவெல்லாம் நிந்தாஸ்துதிகளாகும்.
இயல்பாக நிகழும் நிகழ்ச்சிகளாற் சில செய்திகள் புலப்படுவதாகக் கூறுதலை நிதரிசனவணியின் பாற்படுத்துவர். அங்கயற்கணம்மை ஊசலாடும்போது சிவபிரான் சித்தத்தை இடங்கொண்டு ஆடுகின்றாளென்பது புலப்படுகின்றதென்கிறார்; எங்ஙனம் புலப்படுமென்பதை,