(97).
என்னும் செய்யுட்பகுதி தெரிவிக்கின்றது.
| “கொடியா ரெத்துணைக் கொதுமை செய்யினும் |
| மதியார் செய்திடு முதவியை யுணர்த்தும்” |
காட்சியொன்றை இவர் வருணிக்கின்றார்;“வானளவும் உயர்ந்த கொடிகள் சந்திரமண்டலத்தைப் போழ்ந்து அதன் வயிற்றைக் கிழிக்க அம்மதி அமுதத்தை வழங்கி அக்கொடிகள் வெயிலிலிருந்த வெப்பத்தை ஆற்றியது” (316) என்பதுவே அது.இங்கேகொடியார்மதியார்என்னும்இரண்டுசொற்களையும்கொடியவர்,அறிவுடையவரென்னும்பொருளுந்தோன்றவைத்தார்.
புணர்நிலையணி (84, 97), திரிபதிசயம் (86, 326, 371-2, 402, 679), சொற்பின் வருநிலை (92, 139, 539), சொற்பொருட்பின் வருநிலை (116, 149, 171, 206, 341, 360), வேற்றுப் பொருள் வைப்பு (158, 315), ஒப்புமைக் கூட்டம் (211, 232, 247), ஒட்டு (243), பரிவருத்தனை (336, 447), உறுப்புக்குறை விசேடவணி (182, 681) முதலிய அணிகள் அங்கங்கே அமைந்துள்ளன.
| பலவகைச் சிலேடைகளை இம்முனிவர் ஆண்டுள்ளார். |
| குண்டுநீர்ப் பட்டத் தொண்டுறைச் சங்கமும் |
| வண்டமிழ்க் கடலின் றண்டுறைச் சங்கமும் |
| முத்தகம் பயின்று காவியங் கற்றுச் |
| சித்திரப் பாட்டிய றேர்ந்தன செல்லும்” |
(191)
என்பதில் வயலிலுள்ள சங்கம், தமிழ்ச்சங்கம் என்பவற்றின் தொழில்களைச்சிலேடையால் உணர்த்தினார்.
| “நவ்வியங்கண் மானுமானு மினிதுகந் திடங்கொள்வார் |
| நஞ்சமார்ந்தென் னெஞ்சமார்ந்து நனிகளங் கறுத்துளார் |
| கைவிளங்கு குன்றுமன்றுங்கோவிலாக் குனித்துளார்” |
(193)
என்பதும் இத்தகையதே.
| “காதன் மகளிர் கலக்கக் கலக்குண்டு |
| பேதுற்றார் நெஞ்சும் பிழைத்தகன்றார் நன்நெஞ்சும் |
| போதம் படரும் புலியூரே” |
(496),
| “பாவலரு நாவலரும் பண்மலரக் கண்மலரும் |
| காவலரு மேடவிழ்க்குங் காசியே” |