(158)
என்கின்றாள்.இது காக்கை இடமாகப் போன தீநிமித்தத்தால் வந்த குற்றமென்றும், இடப்பாகத்திலே பூங்கொடி போல் வாளாகிய ஒருத்தி இருத்தலால் வந்த குற்றமென்றும் இரு வகைப் பொருள் தோற்றின. இதில் சிலேடையணி வேற்றுப் பொருள் வைப்பணியோடு சேர்ந்து வந்தது.
ஒரு செய்தியை சொல்லுமிடத்து வேறொரு பொருளும் உடன் தொனிக்கும்படி பாடும் ஆற்றலும் இம்முனிவர்பால் உண்டு.
பாற்கடலைக் கடைந்த காலத்தில் போற்றிய ஆலகால விடத்தைக்கண்டு தேவர்கள் அஞ்சி நடுங்கச் சிவபெருமான் அதனை எடுத்துகண்டு தேவர்கள் இடையூறின்றி அமுதமுண்ணும்படி செய்வித்தனரென்ற செய்தியை ஓரிடத்திற் கூறுகின்றார். அங்கே ஆலகாலவிடத்தை,
| “துழாய்முடித் தீர்த்தனொ |
| டெவரு மதித்துப் பராபவத் தீச்சுட |
| அமுதுசெய் வித்திட்ட போனகம்” |
(6)
என்கின்றார்.நஞ்சைப் போனகமென்று கூறவந்தவர், ‘தீ மூட்டிச் சமைத்து உணவளித்தவர்’ என்ற ஒரு பொருள் உடன் தோற்றும்படி ‘தீச்சுட அமுது செய்வித்திட்ட போனகம்’ என அமைக்கின்றனர்.
சிவஞானத்தைக் களிறாக உருவகம் செய்யவந்தவர்,
| “துதிக்கையினாற் பஞ்சமலங் |
| காய்ந்தசிவ ஞானக் கடாக்களிறும்” |