(337)
என்றார்;‘ஆடையின் தலைப்பில் முடிந்து கொள்ளப்படும் மரகதமே’ என்று மற்றொரு பொருளையும் இது தோற்றுவித்தது. இத்தகைய பிரயோகங்கள்பலவற்றை அங்கங்கே காணலாம்.
உருவகவணியும் உவமையணியும் இவர் செய்யுட்களில் நன்கு அமைந்து இவரது புலமைத்திறத்தை விளக்குகின்றன. கந்தர் கலிவெண்பாவில் இருநிலமே சந்நிதியா நிற்குந் தனிச் சுடருக்கு யானெனதென்றற்ற இடமுதலியவற்றைத் திருவடடி முதலியனவாக உருவகம் செய்கின்றார் (1:34-6); முருகக் கடவுள் அத்துவாக்களின் நிலையே தம் வடிவமாக நிற்கும் நிலையை விரித்து மந்திர முதலியவற்றைச் சோரு முதலியனவாக உருவகம் செய்கின்றார் (1:60). அம்பிகை அண்டங்களை யுண்டாக்கும் செயலைச் சிற்றில் விளையாட்டாக ஒரு செய்யுளில் உருவகிக்கின்றார் (16). இளமையை நீர்க்குமிழியாகவும், செல்வத்தை அலைகளாகவும், யாக்கையை நீரிலெழுத்தாகவும் (489) உருவகம் செய்கின்றார். கல்வி, கவித்துவம், சொல்வளம் என்பவற்றை முறையே ஒருவனுக்கு மனைவியாகவும் புதல்வனாகவும், செல்வமாகவும் உருவகஞ் செய்கின்றார் (209). வண்மை யுடையாரைக் கற்பக தருவாக உருவகம் செய்து அவருடைய கண்ணோக்கை அரும்பாகவும், நகைமுகத்தை மலராகவும், இன்மொழியைக் காயாகவும், வண்மையைப் பழமாகவும் அமைத்து அதனை முற்றுருவகம் ஆக்குகின்றார் (242).
‘நான் யமவாதனைக் குட்படாது நின் அருளால் முத்தியின்பம் பெறவேண்டும்’ என்னும் கருத்தை விரித்து, “யமனென்னும் பெயருடைய கொடுந்தொழிலையுடைய வலைஞன் யாக்கையாகிய உவர்நீர்க் கேணியில் அறிவாகிய தலையையுடைய உயிராகிய மீனைத் துன்புறுத்திப் பிடிக்கும் இயல்பின்ன்; அதற்காக வாத பித்த சிலேட்டுமமென்னும் மூன்று தலையையுடைய தூண்டிலை வைத்து அதன்கண் உள்ள வாழ்நாளாகிய மிதப்பிலே கண்வைத்துப் பல்லைக் கடித்துக்கொண்டிருக்கின்றான்; அவன் தன்னுடைய முயற்சி வீணாகிவிட்ட