ஆராய்ச்சி71

தென்று ஏமாற்றமடையும்படி அந்த உயிராகிய மீனத்தை அருட்பெருங் கடலிலே பாயும்படி வைத்துப் பரமானந்தத் திரையொடு முலாவிப் பெருமித மெய்தும்படி திருவருள் நோக்கம் பாலிக்க வேண்டும்” (320) என்று உருவக அணி நலம்பட அமைத்தனர். சிதம்பர மும்மணிக்கோவையில் ஒரு செய்யுளில் ஆணவத்தைச் சேரிப்பரத்தையாக வைத்து அதற்கேற்ப அவ்வுருவகத்தைச் சைவசாஸ்திர கருத்துக்கள் அமைய விரித்துள்ளார் (478). ஞானாசிரியனை உழவனாக உருவகம் செய்து அவ்வுருவகத்தை மிக விரிவாக அமைத்தனர்     (575).

    உவமையணியின் பலவகைகளை இவர் அமைத்திருக்கின்றனர். இயற்கைப் பொருள்களுக்கேற்ற உவமைகளைக் கூறுகின்றனர். வெண்கடப்ப மலருக்குத் துகிலும் (73), கோங்க மலருக்குப் பொற்கிழியும் (73), பாம்புக்குக் காந்தளும் (636), தாமரையிலைக்கு மரகதத் தகடும் (566), அதன் மலருக்கு மாணிக்கமும் (566), கொன்றைக்குப் பொன்னும் (636), உவமையாக எடுத்துரைக்கின்றனர். சைவ சாஸ்திரக் கருத்துக்களையும் நீதியையும் உவமையாக எடுத்தாள்கின்றார் (76, 470, 587). நீதிநெறி விளக்கத்திற் பல நீதிகளை உவமையினால் விளக்குகின்றார (213, 222, 260, 261, 264, 266, 300). ஒரு பொருளுக்கு ஒரு பொருளை உவமை கூறுதலைச் சில விடங்களிற் காணலாம்; “பிறரை வஞ்சித்து எளியாரது உடைமை கொள்வாருடைய செல்வம் மகளிர் நகில்போலப் பெருத்தாலும் அவர்கள் இடைபோலத் தேய்ந்துவிடும்” (268) என்பர்; தலையாயார், இடையாயார், கடையாயார் ஆகிய முத்திறத்தினருடைய செல்வங்களுக்குப் பொதுமகள், குலமகள், கைம்பெண் என்பார் நலத்தை உவமை கூறினர் (271); இவை ஓரினமாகிய பொருளுக்கு ஓரினமாகிய உவமையாதல் காண்க.

    சிவபெருமானது திருமுடிக்கு ஏனற்புனத்தை ஒரு செய்யுளில் உவமையாக்குகின்றார்; “கமலேசரது வேணியிலுள்ள தலைபுனத்தில் பறவைகளைப் பயமுறுத்த வைத்ததலைபோலும்; கங்கை, அப்புனத்தில் தினைப்பாவல் புரியும் குறமகள் போல்வாள்; பிறை, அவள் கைக்கொண்ட கவணை ஒக்கும்” (334) என்பது அவ்வுவமையின் விரி.

    அத்திருமுடிக்குத் தட்டான் பட்டறையை மற்றொரு செய்யுளில் உவமை கூறுகின்றனர்;