(491)
என்று சிவபெருமானை இவர் சமற்காரமாக்க் குறிக்கின்றார். பிறிதோரிடத்தில், “மதுரேச, நின் திருவுருவம் ஆணும் பெண்ணுமாகிய ஈருருவும் ஓருருவாய் இயைந்தமைந்தது வியப்பு; துழாய் மாலையணிந்த திருமால் திருமகளுக்கும் நிலமகளுக்கும் கணவராக இருப்பதோடு நினக்கு மனைவியாகவும் நிற்பது அதனினும் வியப்பானது” (199) என்கிறார்.
சிவபெருமான் தமக்கு அருளாமைக்குக் காரணம் கூறப்புகுவார்போலத் தொடங்கி,“பிருகுமுனிவர்கொடுத்ததசாவதாரத்துக்குரிய சாபத்தால் பல பிறப்பெடுக்கும் திருமால் அறிந்ததைப் போலப் பிறத்தலின் துன்பத்தை நீ அறியாய்; ஆதலின் என் பிறவித் துன்பத்திற்காக என்பால் இரங்கி அருளவில்லைபோலும்!” (324) என்று சிவபரத்துவத்தை உணர்த்துகின்றார்.