ஆராய்ச்சி79

செய்யளந்தாதி அமைந்துள்ளது. தசாங்கப் பத்தென்பது ஒருவகைப் பிரபந்தம்; கந்தர் கலிவெண்பாவில் தசாங்கத்தை (1:66-74) அமைத்துள்ளார்.

    பெருங்காப்பியத்துக்குரிய நாடு, மலை, ஆறு, காலம் முதலிய வருணனைகளிற் பல இவர் வாக்கில் தனித்தனியே காணப் பெறுகின்றன. அதற்குரிய பொருள்களாகிய அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கையும் தனியே நீதிநெறி விளக்கத்திற் காணலாம். இவற்றால் இவர் முயன்றிருப்பின் பெருங்காப்பியம் அமைக்கும் பெற்றியும் உடையாரென்பது தெளிவாகும்.

    இவர் பாடியுள்ள பிரபந்தங்களில் அவ்வப் பிரபந்தங்களுக்குரிய இலக்கணங்கள் விளக்கமாக அமைந்துள்ளன.

கந்தர் கலிவெண்பா

    கந்தர் கலிவெண்பாவென்பது முருகக் கடவுளிடம் விண்ணப்பம் செய்துகொள்ளும் முறையில் அமைந்துள்ளது. இங்ஙனம் கலிவெண்பாவால் அமைந்த பிரபந்தங்கள் பல பிற்காலத்தில் இயற்றப்பெற்றுள்ளன.

பிள்ளைத்தமிழ்கள்

    மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழிலும் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழிலும் பிள்ளைத் தமிழிலக்கண அமைதிகளைக் காணலாம். கடவுளரையேனும் ஆசிரியரையேனும் உபகாரிகளையேனும் குழந்தையாக வைத்துக் காப்பு முதலிய பத்துப் பருவங்களை அமைத்துப் பாராட்டுவது இதன் இலக்கணம். சந்தப் பாக்கள் இதில் விரவிவரும். பெண்பாற் பிள்ளைத் தமிழிலமைந்த பருவங்களுக்கும் ஆண்பாற் பிள்ளைத் தமிழ்ப் பருவங்களுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. அவ்விரண்டு வகைப் பிரபந்தங்களையும் இவர் இயற்றியுள்ளார்.

    திருமால் முதலிய தெய்வங்கள் பாட்டுடைத் தலைவராகிய குழந்தையைப் பாதுகாக்க வேண்டுமென்று அமைப்பது காப்புப் பருவம். திருமால் காப்புக் கடவுளாதலின், காப்புப் பருவத்தின் முதற்செய்யுளை அவரது காப்பாக அமைத்தல் மரபு. இவர் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் காப்புப் பருவத்தில் முறையே திருமால், வெள்ளியம்பலவாணர், சித்தி விநாயகக் கடவுள். முத்துக்குமரேசர், பிரமதேவர், தேவேந்