(367).
(38)
என்று இவ்வாசிரியரே கூறுதல் காண்க. இதற்கெனவே தாலாட்டெனத் தனிப் பாட்டுகளின் தொகுதி சில வழங்குகின்றன. திவ்யப் பிரபந்தத்ததில் அவற்றைக் காணலாம். தாலோ தாலேலோ என்னும் அநுகரணத்துடன் இப்பருவப் பாட்டுக்கள் முடிகின்றன.
நான்காவது சப்பாணிப் பருவம். சப்பாணி கொட்டும்படி குழந்தையிடம் கூறுவதாக அமைப்பது இது. சப்பாணியென்றது ஸ: பாணி யென்பவற்றின் தொகை. கையோடு கை சேர்த்துக் கொட்டலென்பது அச்சொற்பொருள். கால்வலியின்றிக் கை வலிகொண்டு நகர்ந்து செல்லுங் குழந்தைகளைச் சப்பாணியென்று கூறும் வழக்கை யறிக.
ஐந்தாவது முத்தப் பருவம். குழந்தையை முத்தந் தாவென்று தாயாரும் பிறரும் வேண்டுவதாகக் கூறுதல் மரபு. முத்தம் என்னும் சொல் முத்தையும் குறித்தலின் முத்தப் பருவத்திற் புலவர்கள், ‘பிறவிடங்களிற் கிடைக்கும் பலவகை முத்தங்களினும் நின் வாய்முத்தமே சிறத்ததாதலின் அதனைத் தருக’ என்று அமைத்தல் வழக்கம். இவ்வாசிரியர் மீனாட்சி யம்மை பிள்ளைத் தமிழில் மாத்திரம் அத்தகைய குறிப்புடைய செய்யுட்களை அமைத்தனர் (47, 48).
ஆறாவது வருகைப் பருவம். தளர்நடையிட்டு வரும் குழந்தையை வாவென்று அழைப்பதாக்க் கூறுவது இப்பருவச் செய்தி.
ஏழாவது அம்புலிப் பருவம். சந்திரனைக் குழந்தையோடு விளையாட வாவென்று அழைத்தலைக் கூறுவது. அம்புலி - சந்திரன். இப்பருவம் ஏனைய பருவங்களைக் காட்டிலும் பாடற்கரியதென்பர்; “பிள்ளைக் கவிக்கம்புலி புலியாம்.” அம்புலியை