82குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

அழைக்கையில் சாம பேத தான தண்டவகையால் முறையே அம்புலிக்கும் பாட்டுடைத் தலைவருக்கும் ஒப்புக் கூறுதலும், வேற்றுமை கூறுதலும், விளையாட வரின் அம்புலிக்கு விளையும் நன்மை கூறுதலும், வாராவிடின் நிகழும் துன்பம் கூறுதலும் புலவர் மரபு. சாமமென்பதற்கு இன்சொலென்று பொருள் கூறுவர்; அஃது ஒப்பிலடங்கும் முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழில் இம்முறையை விளக்கமாக்க் காணலாம்.

    இவ்வேழு பருவங்களும் இருவகைப் பிள்ளைத் தமிழுக்கும் பொது. மேல், பெண்பாற் பிள்ளைத் தமிழில் அம்மானப் பருவம், நீராடற் பருவம், ஊசற் பருவமென்பவற்றையும், ஆண்பாற் பிள்ளைத் தமிழில் சிற்றிற் பருவம், சிறுபறைப் பருவம், சிறுதேர்ப் பருவமென்பவற்றையும் அமைத்தல் மரபு.

    அம்மானைப் பருவமாவது பாட்டுடைத் தலைவியை அம்மானை யாடும்படி கூறுவது. மகளிருக்கே உரிய இவ்விளையாட்டை வேறு இடங்களிலும்,

“பனிமலரைக் குழலியர் .................................டம்மானையாட”
(196).
“தருநிழற் செய்த .......................டம்மனை யாடுழி”
(469)
என்று கூறுவர். இவ்விளையாட்டுக்குரிய பாடல்கள் தனியே உண்டு. கலம்பக உறுப்புக்களில் அம்மானையென வருவது இவ்விளையாட்டுக்குரிய பாட்டே.

    நீராடற் பருவத்தில் பாட்டுடைத் தலைவியை நீராட வேண்டுமென்று வேண்டுதலும் ஊசற் பருவத்தில் ஊசலாட வேண்டுதலும் காணப்படும். ஊசலென்பது மகளிர்க்குரியதொரு விளையாட்டு.

    ஆண்பாற் பிள்ளைத் தமிழில் வரும் சிற்றிற்பருவத்தில் சிற்றில் விளையாடும் சிறுமியர் பாட்டுடைத் தலைவர் தம் சிற்றிலை அழிக்கும்போது ‘எம் சிற்றிலை அழியாதொழிக’ என வேண்டுதல் கூறப்படும்.

    சிறுபறைப்பருவத்திற் பாட்டுடைத் தலைவரைச் சிறுபறை முழக்கும்படியும், சிறுதேர்ப்பருவத்தில் சிறுதேருருட்டும்படியும் வேண்டுதல் கூறப்படும்.

கலம்பகங்கள்

    கலம்பகங்கள் மூன்றை இவர் பாடியுள்ளார். கலம்பகமென்பதற்குப் பலவகைப்பொருள் கூறப்படினும் பலவகை