86குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

“முயலாது வைத்து முயற்றின்மை யாலே”
(255)
என்பதிலுள்ள முயற்றின்மை என்பது,
“முயற்றின்மை, இன்மை புகுத்தி விடும்”
(குறள், 616)
என்பதைக் கண்டு அமைத்துக் கொண்டது.
“கொடிறுடைத்துக் கொல்வான்போற் கைவிதிர்த்து”
(278)
என்பது,
“கொடிறுடைக்குங் கூன்கையர்”
(குறள்,1077)
என்பதை நினைந்து கூறியது.
    வேறு பிரபந்தங்களிலும் இங்ஙனமே குறளிலிருந்து எடுத்தமைத்தசொல்லாட்சியைக் காணலாம்.

"ஐயுணர் வடக்கிய மெய்யுணர் வல்லதை"
(475)
என்பதற்கும்,
“ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
 மெய்யுணர் வில்லா தவர்க்கு”
(குறள்,354)
என்பதற்கும் தொடர்பிருத்தல் காண்க.
“உதவியின் வரைத்தோ வடிகள்கைம் மாறே”
(557)
என்பது,
“உதவி வரைத்தன் றுதவி யுதவி
 செயப்பட்டார்சால்பின்வரைத்து”
(குறள்,105)
என்பதனோடு ஒப்புமையுடையது.
“ஆரா வியற்கை யவாநீப்பி னந்நிலையே
 பேரா வியற்கை தரும்”
(குறள், 370)
என்பதிலுள்ள பேராவியற்கை என்னும் தொடரை இவர்,
“பேரா வியற்கை பெற்றனர்”
(454)
“பேரா வியற்கை பெற்றினி திருப்ப”
(572)
என இரண்டிடங்களில் எடுத்தாண்டனர்.

கம்பராமாயணச் சொற்பொருளாட்சி

    தமிழ்க் காப்பியங்களுட் சிறந்த கம்பராமாயணத்தில் இம்முனிவருக்கு ஈடுபாடு அதிகம். காசியிலிருந்த காலத்தில் இவர் சில சமயங்களிற் கம்பராமாயணப் பிரசங்கம் செய்து வருவதுண்டார். இவருடைய செய்யுட்களில் கம்பருடைய கருத்துக்களும் சொல்லாட்சியும் விரவியிருக்கும். அவற்றுள் சில வருமாறு: