(மிதிலைக்.457)
என்பதை நினைப்பிக்கின்றது.
‘நமரங்காள்’ என்னும் சொல்லை இவ்வாசிரியர் ஐந்து இடங்களில் உபயோகித்துள்ளார். அச்சொல் கம்பராமாயணத்தில் வானரர் களங்காண்படலத்திற் பல இடங்களில் வருகின்றது. கம்பர் அச்சொல்லை,
| “நாகக் குன்றி னின்றன காண்மி னமரங்காள்” |
| “நளினக் காடே யொப்பன காண்மி னமரங்காள்” |
என்பன போல ஐந்துசீருள்ள செய்யுளில் அங்கே வைத்தார்; இவரும்,
| “வெஞ்சம னஞ்ச வேலொ டெதிர்ந்தா னமரங்காள்” |
(520)
என அத்தகைய செய்யுளில் ஐந்தாஞ் சீராக வைத்துள்ளார்.
| “வெள்ளி வீழிடை வீழ்த்தெனத் தாரைகள் ................. |
| வழங்கின மேகமே” |
(கம்ப. ஆற்றுப்.4)
என்பது கம்பர் வாக்கு.
| “மின்செய் கொண்மூ வெள்ளிவீழ் வீழ்ப்ப” |
(524)
என்பது இவர் வாக்கு.
இவர் சில உவமைகளைக் கம்பர் செய்யுளிலிருந்து எடுத்தாண்டுள்ளார்: