(கார்காலப்.121)
என்பதிலுள்ள வருணனையையும் உவமையையும் அறிந்து அமைத்தவையே என்பதில் ஐயமில்லை.
தமிழ்நூலறிவோடு வடநூலிலும் இவர் அன்புடையவர். வடநூல்களிற் காணப்படும் செய்திகள் பலவற்றை இவர் அங்கங்கே அமைத்துள்ளனர். வடசொற்களும் சொற்றொடர்களும் இவருடைய வாக்கில் விரவி வந்துள்ளன. தமிழுக்கேற்பத் திரிக்காமல் சில தொடர்களையும் சொற்களையும் வழங்குவர். அவற்றிற் சில வருமாறு:
சொற்கள்: சித்ரம், தர்க்கம், பிரதாபம், பத்மம், ரத்நம், லளிதம், லோகம், வ்ருத்தர்.
சொற்றொடர்கள்: அருணரத்நம், கல்யாணசுந்தரர், கல்யாண சௌந்தரி, சந்த்ர சேகரன், சித்ர ரதி, த்ரிகூடம், த்ரிசூல, நவரத்னம், பக்தசகாய.
பின்வருவன போன்ற வடமொழித்தொடர்கள் பல இவர் வாக்கில் வந்துள்ளன. உபயசரணன், கராசலம், கமலலோசனன், காமானலம், குஞ்சிதகமலம், குஞ்சிதசரணம், குடிலகோடீரம், குணா குணம், கும்பாதிகாரியம், சகதண்டமண்டலம், சரணாரவிந்தம், சுத்தநித்தவட்டம், சேனாபராகம், தசமுகநிசிசரன், பரதபதயுகம், பாலலோசன. பானுவிலோசன, மனோலயம், வதனமண்டலம், விரகானலம்.