பலவகையாகத் திரித்துக்கொண்ட சொற்களிற் சில வருமாறு: அத்திரம், அம்பை, அமராபதி, அயிராபதம், அருக்கியம், அவிமானம், கப்புரம், சடானனன், சாரூப்பியம், சிட்டர், சிட்டி, செந்துக்கள், சென்மம், சொம், தெய்வீகம், பமரம், பரப்பிரமம், பற்பம், பார்ப்பதி, பெந்தம், மயிடம், முட்டி, வாச்சியம்.
சில வடசொற்களை வழக்கமாக வழங்கும் உருவத்தை மாற்றி வேறு சொற்களால் அமைப்பர். அவற்றிற் சில தமிழ் மொழிபெயர்ப்பாகவும் சில ஒரு வடசொல்லிற்க வேறு வட சொல்லமைந்ததாகவும் இருக்கும். நரசிங்கத்தை மானிட மடங்கலென்றும், இரணியனை ஆடகப்பெயரினவுணனென்றும், பானுகோபனை, இரவிபகையென்றும், கிரவுஞ்சகிரியைக் குருகு பெயர்க்குன்றமென்றும், மீனாட்சியை அங்கயற்கண்ணாளென்றும், விசாலாட்சியைப் பெருந்தடங்கண்ணாளென்றும், சரத்தை நிலையில் பொருளென்றும், அசரத்தை நிலையியற் பொருளென்றும் கூறுவர்.
சில இடங்களில் வட சொற்றொடரைத் தமிழ்முடிபு பெற வைக்கின்றார்; இரசதவசலம் (539).
கல்வியை வித்யாவென்ற பெண்பாலாற் குறித்தல் வட மொழி வழக்காதலின் அதனைப் பின்பற்றி, “கல்வியே கற்புடைப் பெண்டிர்” (209) என உருவகம் செய்தார்; முத்தியை, “முத்தித் திரு” (637) என்று கூறுதலும் இத்தகையதே.
வடமொழி தென்மொழி நூற்புலவர்கள் பல செய்திகளை முந்தையோர் கூறிய மரபுபற்றித் தாமும் எடுத்துக் கூறுதல் வழக்கம். இவ்வாசிரியரும் அத்தகைய செய்திகள் பலவற்றைப் புலப்படுத்துகின்றார்.
புகழ் வெண்ணிறமுடைய தென்பது கவிமரபு; | “இவள்பெரும்புகழ்நெடுநிலா வெங்கணுநிறைந் திடுவது” |
(68) என்பதில் இதனைப் புலப்படுத்தினர். பிரதாபம் செந்நிறமுடைய தென்பது நூல்வழக்கு; | “செந்தேனா றுடன்கடவுள் வானா றெனப்பெருகு | | சித்தாமிர் தஞ்சிவபிரான் | | சீர்த்திப்ர தாபநிகர் தினகர புரித்தேவ | | தேவனைக் காக்கவென்றே” |
|