92குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

“விபஞ்சிபயி றருமதங்கர்”
(352)
என்பர். யாழ்வகைகளில் மகரயாழும் (73), சீறியாழும் (150, 656) இவராற் கூறப்பெறுகின்றன. சீறியாழை யுடையவன் சிறுபாணனென்று பத்துப் பாட்டால் தெரிகின்றது.

“தெள்விளி யெடுக்குஞ் சீறியாழ்ப் பாண”
(656)
என்பதில் இவர் சீறியாழையுடைய சிறுபாண்னைக் குறிப்பிடுகின்றார். யாழ் வாசிக்கும் முறையை இரண்டிடங்களிற் (518, 656) சுருக்கமாக்க் கூறுகின்றார்.

உலகியலறிவு

    மதிநுட்பமும் நூலறிவும் ஒருங்கு வாய்ந்த இப் பெரியார் உலகியலறிவும் நன்கமைந்தவர். தம் கண்ணை மலரத் திறந்து உலகைப் பார்த்துக் களித்தலின்றி நூல்களிலுள்ள பொருள்களை மாத்திரம் மாற்றி மாற்றி யுரைக்கும் சிலரைப் போல்லலாமல் இவர் தம் கண்ணால் உலகை நன்கு அறிந்து தாம் கண்டும் கேட்டும் அறிந்தவற்றைத் தம்முடைய கவிதைப் பிரவாகத்திலே கலந்து செலுத்துகின்றார். ஒரு கடவுள், ஒரு மொழி, ஒரு கலை, ஒரு நாடு என்னும் வரையறையின்றிப் பல கடவுளையும் பல மொழிக் கருத்துக்களையும் பல கலைச் செய்திகளையும் பல நாட்டு வருணனைகளையும் இவருடைய செய்யுட்களிற் காண்கின்றோம். இந்நாட்டின் தென்றிசையிலுள்ள செந்தூரையும் வட நாட்டிலுள்ள காசியையும் இவர் கண்டறிந்து பாடுகின்றார். தாம் பிறந்த பாண்டி நாட்டையும், குருவைப் பெற்ற சோழ நாட்டையும், வாழ்ந்து வந்த கங்கைக் கரையையும் வருணிக்கின்றார். சிவ்பெருமான் முதல் கலைமகல் வரையுள்ள தெய்வங்களைப் பாராட்டுகின்றார். தென்றமிழ் மொழியையும் ஹிந்துஸ்தானிச் சொல்லையும் இணைத்துப் பாடுகின்றார். சைவ பரிபாஷைகளோடு வைணவ பரிபாஷைகளையும் ஒருசார் அமைக்கின்றனர். இவற்றால் இவர், “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்னும் மனோபாவமும் விரிந்த உலகியலறிவும் உடையவரென்பதை உணரலாகும்.

    ஓரறிவுயிர்முதல் ஆறறிவுயிர் வரையிலுள்ளவற்றின் இயல்புகளை இவர் தெரிந்து செய்யுள் செய்கின்றார்.

தாவரங்கள்

    நிலத்தைக் கீண்டு பொற்சுளைகளோடு பழுத்து நிற்கும் குடக்கனிகளை யுடைய வேர்ப் பலாவின் வருணனையைப் பல