இடங்களிற் காணலாம். கமுகமரத்தின் பாளையிலுள்ள அரும்புகள் முத்துப்போலத் தோற்றுதலும் அப்பாளை கவரிபோலிருத்தலும் காய் மரகதத்தை ஒத்தலும் பழம் பவழத்தைப் போலத் தோற்றுதலும் சில இடங்களில் இவராற் சொல்லப் பெறுகின்றன. தென்றல் வரத் தேமாமரம் மலர்தலும் (24), வேங்கை மலரை வண்டு விரும்பாமையும் (578), புன்னை இலையறப் பூத்தலும் (578), வெண்கடப்ப மலர் துகிலைப் போலத் தோற்றுதலும் (73), கோங்கமலர் பொற்கிழியைப் போலிருத்தலும் (73), ஆகிய மரச் செய்திகளை அங்கங்கே பார்க்கலாம். தேங்காயை முப்புடைக்கனி, (56, 374) என்பர். ஓரிடத்தில் (672) அரையென்னும் ஒரு மரத்தைக் குறிப்பிடுகின்றார்; வேழக்கரும்பென்னும் ஒரு கரும்பின் சாதியைக் கூறுவர் (423); நெல்லிலும் கமுகிலும் முத்துண்டாகுமென்பர் (328, 375); தாழை வெண்சோறு ஏந்துதலைச் சில இடங்களிற் கூறுவர் (454, 695).
கொன்றை கார்காலத்தில் மலர்தலையும் (524. 539), அதன் பூந்தாது பொன்போன்றிருத்தலையும் (326) முல்லைமலர் கார்காலத்திலும் (159), மல்லிகைமலர் மாலையிலும் (352) மலருமென்பதையும்இவர் உணர்த்துகின்றார்.
இவர் உணர்த்தும் பறவை இயல்புகளிற் சில வருமாறு: அன்னம் தொடுதோலடயையும் செஞ்சூட்டையுமுடையது (24). பாலிலிருந்து நீரைப் பிரிக்கும் ஆற்றலுள்ளது (691); குயில் கார்மேகத்தைக் கண்டு வருந்துவது (522, 545), மாமரத்தை விரும்புவது (522); சகோரம் நிலவை அருந்துவது (102, 373, 382, 413); மயில் மேகத்தைக் கண்டு ஆடுவது (435, 522); கொக்கு இரைவருதலைக் கருதிக் கபடமாக உறங்குவது (191).
விலங்கியல்புகளாக இவர் புலப்படுத்தியவற்றில் சில வருமாறு: எருமை கயவாயையும் செங்கண்ணையு முடையது (24), அதன் கொம்பு இரும்புபோல்வது (324). நெற்கதிரைக் கறித்துக் குதட்டுவது (355); யானை புழுதியாட்டயரும் இயல்பினது (2), ஏழுயர் மும்மத யானை (593), காட்டில் விளையாடுவது (11), மதக்களிப்பால் பாகனை மீறுதல் (250); காட்டுப் பசு நக்கி உயிர் வாங்குவது (280); குரங்கு குழிந்த கண்களையுடை
|