94குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

யது (100), ஒருவகைக் குரங்கு இரு வேறுருவையும் கரு விரலையுமுடையது, பலாப்பழத்தை யுண்பது (312), நெடுந்தாளை யுடையது (348), மழைக்காலத்தில் கால் தழுவி ஒடுங்குவது         (522).

மக்கள் இயல்புகள்

    மக்களிற் பருவத்தாலும் சாதியாலும் பல்வேறு இயல்புகளும் தொழில்களும் அமைகின்றன. அவற்றை அறிந்து செய்யுள் செயிதலிலும் இவர் வல்லவர்.

    இவர் பாடிய இரண்டு பிள்ளைத் தமிழ்களிலும் குழந்தைகளின் இயல்புகளையும் விளையாடல்களையும் புலப்படுத்துகின்றார். கண் பிசைந்தழுதல் (419), குழந்ததையன்பு (472), குறுமென்னடை (420), சப்பாணி கொட்டுதல் (34, 380), சிற்றில் சிதைத்தல் (420), சிறுகுறும்பு செய்தல் (391, 401), சிறுதேருருட்டல், சிறு பறை முழக்குதல், செங்கீரை யாடுதல், செவிலியர் மார்பில் உதைத்தல் (391), தளர்நடையிடுதல் (115), தாளுதைத்து அழுதல் (419), தொட்டில் உதைத்தல் (367), பண்டி சரிந்தாடல் (365), புழுதியளைதல் (366, 401), பெருவிரல் சுவைத்தல் (37, 367), வாய்த்தேறல் (14, 37, 115, 312, 366, 390) வாய்நீர் துகிலை நனைத்தல் (14, 400) விம்மிப் பொருமியழுதல்     (367).

    இவர் புலப்படுத்திய மகளிர் இயல்புகளும் வழக்கங்களும் பல; அவற்றிற் சில வருமாறு:

    மகளிர் விளையாட்டு வகை: அம்மானையாடுதல், அன்னம் கிளி மயில் மானென்பவற்றை வளர்த்தல், ஊசலாடுதல், கண்பொத்தி விளையாடுதல், கழங்காடுதல் கிளியொடு முத்தாடுதல், கண்ணமெறிந்து விளையாடுதல், சோலையில் விளையாடுமல், நீர் வீசு கருவியாகிய சிவிறி வீசுதல், புதுவெள்ளமாடுதல், வண்டலாடுதல், சிறுமியர் சிற்றில் விளையாடுதல, முற்றிலால் மண் கொழித்தல்.

    அவர் விளையாட்டுக்குரிய கருவிகளாகப் பறவைகளும், மானும், முற்றிலும், சிவிறியும், பொற்கழங்கும், மாணிக்கக் கழங்கும், முத்துப் பந்தும், நீலம், பவழம், மரகதம், முத்து என்பவற்றாற் செய்த அம்மானைகளும் கூறப்படுகின்றன.

    அவர்கள் தம் அடிக்குச் செம்பஞ்சுக்குழம்பு பூசுதலும், பல வகை ஆபரணங்களையணிதலும், அகிற்புகையாற் கூந்தலைப்