96குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

சாதி இயல்புகள்

    சாதியியல்புகளாக இவர் பாடல்களிற் கண்ட செய்திகளிற் சில: கடைசியிர் குரவையிடுதல், கட்குடித்தல்; குயவர் திரிகை திருத்தல், குறமகளிர் தினைப்புனம் காத்தல், குறமகள் குறி பார்த்தலை, குறவர் தேனும் தினைமாவும் உண்ணுதல்; வேடர் சீறூரிற் குடிகொள்ளுதல்.

தொழிலாளர் இயல்புகள்

    பலவகைத் தொழிலாளர்களுடைய செயல்களை இவர் எடுத்துணர்த்துகின்றார்: அவை வருமாறு: அஞ்சனத்தாற் புதையல் எடுத்தல், அரிப்பரித்தல், இந்திரசாலம் புரிவோன் யாவரையும் மயக்கித்தான் அதிற்சாராதிருத்தல், இரசவாதம் செய்தல், உழவுத் தொழில், உளியாற் கல்லைத் தகர்த்தல், ஓவியர் எழுதுகோலைக் கொண்டு படம் எழுதுதல், கழைக்குகூத்தர் கூத்தாடுதல், தேர்ப்பாகர் முட்கோல் பிடித்தல், படியெடுத்தல், பொற்கொல்லர் ஆபரணம் செய்தல், மருத்துவர் சத்திரவைத்தியம் செய்தல், மள்ளர் பிணையலிடுதல், முத்துக் குளித்தல், விறகு விற்றல், வீடு கட்டுதல்.

வேறு பலவகை வழக்கங்கள்

    அசதியாடுதல், அம்பெய்வோர் இலக்குகளில் எய்து பழகுதல், அருக்கியம் உதவுதல், அளவையினளந்து கொண்டு உத்தியிற்றெளிதல், ஆடையால் வீசுதல், ஆடையின் தலைப்பில் மணியை முடிதல், ஆடையை உதறி உடுத்தல், உபகாரிகள் இசைப் புலவருக்குத் துகிலும் பொற்கிழியும் அளித்தல், கண்ணேறு காக்க வேம்பை அணிதல், கலியாணத்தில் சேற்றுருண்டையை எடுத்தெறிதல்,கலியாணத்தில் மஞ்சள்நீர் விளையாடுதல், கலியாணத்தில் முரசும் சங்கமும் ஒலித்தல், கன்னத்திலடித்தல், கன்னத்தில் தெறித்தல், குடங்கொண்டு நீந்துதல், குழந்தைக்காகத் தாய் மருந்துண்ணுதல், கைகோத்துக்கொண்டு செல்லுதல், கைதட்டி யழைத்தல், கையெழுத்திடுதல் கொடைக்கு முரசு முழக்குதல், சுரநோயுற்றாருக்குத் திருநீறு பூசுதல், தும்மலாலும் காக்கையாலும் நெல்லாலும் பல்லி சொல்லாலும் நிமித்தம் பார்த்தல், தேரிற் கரும்பு கட்டுதல், தோள் கொட்டுதல், நிழலுக்கு ஒதுங்குதல், பாரத்தால் முதுகுளுக்குதல, பிடர் பிடித்து உந்துதல், பிடரைக்்கையால் தாங்கி அண்ணாந்து பார்த்தல், புகையால் வாழைப்