ஆராய்ச்சி105

84 லக்ஷம் உடல் வகைகளிற் பிறந்துவருவன; நல்வினைப் பயத்தால் இருவினை யொப்பு, மலபரிபாகம், சத்திநிபாதம் பெற்று இறைவனே ஆசானாக எழுந்தருள அவனருளால் பசுகரணம் நீங்கிப் பதிகரணம் பெற்று விளங்குவது. ‘இறைவன் ஒருமலமுடைய விஞ்ஞானாகலருக்கு அகக்கண்ணில் திருவுருவக் கோலங்காட்டியும் இருமலமுடைய பிரளயாகலருக்குப் புறத்தே இடபவாகனராகக் காட்சி கொடுத்தும் அருள் புரிவான்’ எனப் பசுவின் இயல்புகளையும் அவை அருள் பெறுமாற்றையும் கூறுகின்றார்.

    ‘சிவபெருமான் அருவம் நான்கு உருவம் நான்கு அருவுருவம் ஒன்று என்னும் நவந்தருபேதமாகவும் அட்டமூர்த்தியாகவும் விளங்குவன்; அவனது திருவடியே வீடாக இருக்கும்; எண்குணத்தான், திகம்பரன், தன் திருச்செவியில் வீணை வாசிக்கும் கந்தருவர்களைக் குழைகளாக அணிந்தவன், சூரிய மண்டலத்திடையே வீற்றிருப்பவன், புவனங்களே திருமேனியாக உடையவன்; மலைகளே அவன் புயங்கள், ஆகாயமே திருமேனி, அண்டகூடமே திருமுடி, பாதலமே பாதம்: அவனே மும்மூர்த்தியாக இருந்து முத்தொழிலையும் நடத்துகின்றான்: ஏகபாதருத்திரமூரத்தி யுருவத்தில் தன் இருபுறத்தும் திருமாலையும் பிமதேவனையும் தாங்கி நிற்கின்றான்: திருமாலை இடப்பாதியிற் கொண்டு சங்கர நாராயணமூர்த்தியாக உள்ளான்: அவன் செய்யும் ஐந்தொழிலும் விளையாட்டு நிமித்தம்; அவனது அருள்மேவின் ஒரு துரும்பும் அகிலாண்டத் தொகிதிகளையும் படைத்தளிக்கும் என்னும் செய்திகளும், “அத்துவக்கள் ஆறு: அவை மந்திர முதலியன; சத்திநிபாதம் நால்வகை; உடல் அறுபத்தெட்டு; நிலம் ஏழு; அவத்தை மூன்று; ஓங்காரம் ஐந்தாலாகியது; மலம் ஐந்து; நாதம் ஒன்பது; வாதனை இரண்டு; மலம் மூன்று;குணம் மூன்று” என்பவையும் இடையிடையே சொல்லப்படுகின்றன.

    சத்திசிவ த்ததுவங்களுக்குள்ள தொடர்பை விரிவாக்க் கூறுகின்றார்.(513, 548).

    சிவபெருமானே முழுமுதலென உணராமல் வியாசமுனிவர் தம் கை நின்றவாறே நிற்கப்பெற்றாரென்ற செய்தியை இவர் மூன்றிடங்களிற் (466, 493, 547) கூறுகின்றனர்; சிவபரத்துவத்தைச் சில செய்யுட்களில் (329, 336, 340, 390, 531, 539, 541) எடுத்தியம்புகின்றனர்.