(140,206)
என்பர்.
சுந்தரமூர்த்தி நாயனாரை நாவலர்பெருமான், ஒருபெரும் புலவன், பாவலனென வழங்குவர். அவர் சிவபெருமானுக்குச் சொன் மாலை சாத்தியதும், திருத்தொண்டத் தொகை பாடியதும், ஆற்றிலிட்ட பொன்னைக் குளத்தில் தேடியதும், சிவபிரானை இருமுறை பரவை நாச்சியார்பால் தூது அனுப்பியதுமாகிய வரலாறுகள் இவராற் குறிக்கப்பெறுகின்றன.
மாணிக்கவாசகரைப் பைந்தமிழ் நவின்ற செந்நாப்புலவன், சொற்றமிழ் விரகனென்பர். அவரது திருக்கோவையாரைக் காமஞ் சான்ற ஞானப்பனுவலென்பர். அவர் சிவபெருமானைக் குதிரை வீரராக வரச் செய்த்து, ஊமையைப் பேச வைத்தது, திருக்கோவையாருக்குத் தில்லை நடராசப் பெருமானே பொருளென்றது ஆகிய செய்திகளை இவர் எடுத்தாள்வர்.
பிற நாயன்மார்களுள் தில்லை மூவாயிரவரை,
| “திருத்தொண்டத் தொகைக்கு முதற்பொரு ளாகி |
| அருமறை கிளந்தநின் றிருவாக்கிற் பிறந்த |
| அறுபதிற் றாகிய வைம்பதிற்று முனிவர்” |
(472)
என்று பாராட்டி, அவருள் நடராசப் பெருமானும் ஒருவர் என்பர். சாக்கிய நாயனார் சிவபெருமானைக் கல்லாலருச்சனை புரிந்த செய்தியை 344-இல் உவமையாக அமைக்கின்றார். சண்டீசர் தம் தந்தை தாளெறிந்தத்தையும் சிவபெருமானணிந்த