(344)
என்ற அடிகளில் இறைவனது கருணைத்திறம் புலப்படக் கூறுவர்.
மூர்த்திகளின் புகழ்
பலவகை மூர்த்திகளின் புகழையும் இவருடைய செய்யுட்களிற் காணலாம். விநாயகர் யானைமுக முடையவராதலின் யானையின் இயல்புகளை அவர்பால் ஏற்றித் துதிப்பர். அவர் மும்மதம் பெருக நிற்றலும் புழுதி விளையாட்டயர்தலும் கூறப்படுகின்றன. அவர் தம் தந்தையர்பால் விளையாடுதலைப் பல செய்யுடகளிற் (57, 73, 314, 546) கூறிகின்றார். மதுரைக் தலத்திலுள்ள சித்தி வியாயகர் வேலூரிலுள்ள கற்பக விநாயக, சிதம்பரத்திலுள்ள கற்பக விநாயக ரென்பாருக்குக் காப்புக் கூறியுள்ளார்; விநாயகரைச் சிறுகட் பெருங் கொலைய மழவிளங்களிறு, தொந்தித் தந்தி, கரடமதகரி, கம்பமத்ததர், படாமணி, மத்தகத்தந்தி, அஞ்சு கஞ்சக்கரக் கற்பகம் மால்யானைக்கன்று, ஒரு கோட்டு மழகளிறு, கைந்நாகத் தானத்தான், பொழிமதங் கரையும் மழவிளங் களிறு எனப்பாராட்டுவார்; 198-ல், “கடமுடையு நறுநெய்க்குண் முழுகியெழு வதையொத்த கரடமதகறி என்று வருணிக்கின்றார். அவர் தூயமையுடையவர்களாற் பரவப் பெருவதும் வீடு பெறும் பொருட்டு முக்காலமும் தொழுவார்க்கு முன்னிற்றலும், கவிதை நலம் பாலித்தலும், மும்மூரத்திகளாலும் தொழப்பெருதலும் கூறுவர்; அவரை யானையாக உருவகம் செய்து, “புலங்க