110குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

ளாகிய யானைகள் ஓடும்படி முழங்கும் யானை” (104) என்றும் “மலையிலே உண்டான கன்னிப்பிடி அளித்த ஓரானை என் மனத்துள் வந்த பாசமாகிய தளையை யறுத்துப் பாவமாகிய கடலைக் கலக்கி நேசமாகிய தளையிலே பட்டு நிற்கும்” (599) என்றும் புகழ்வர்.

முருகக் கடவுள்

    இவர் பலவேறு தெய்வங்களையும் பாடும் இயல்பினராயினும் தம்மை இளமையிலே ஆட்கொண்ட முருகக் கடவுளிடத்தே தனி அன்பு பூண்டவர்; அவரையே வழிபடு கடவுளாகக் கொண்டவர். முருகக்கடவுள் விஷயமாக இரண்டு பிரபந்தங்களை இவர் இயற்றியுள்ளார்; பிற விடங்களிலும் அவருடைய புகழ் வகைகளை விரித்துச் செல்வர்.

    அவருடைய திருவவதாரம் முதலிய வரலாறுகளைச் சுருக்கமாக கந்தர் கலிவெண்பாவில் அமைத்திருக்கின்றார்; அவருடைய திருவிளையாடல்கள் பலவற்றையும் அங்கங்கே பாராட்டிச் செல்கின்றார். சரவணப் பூந்தொட்டிலில் விளையாடியது, இந்திரன் முதலியோரை எதிரத்தது, தகரேறியது, நான்முகனைக் குட்டிச் சிறையிருத்தியது. சிவபெருமானுக்குப் பிரணவோபதேசம் புரிந்தது, வீரவாகுதேவருள்ளிட்ட நவவீரர்களைத் துணைகொண்டது கிரவுஞ்ச மலையின்மேல் வேல் எரிந்தது, சூரசங்காரம் செய்த்து, தேவயானையை மணம் புரிந்தருளியது, வள்ளிநாயகியை ஆட்கொண்டு மணந்தது முதலியவற்றைச் சுவைபெறக் கூறுகின்றார். சிவபெருமானும் உமாதேவியாரும் முருகக்கடவுளைச் சீராட்டுதலைப் பல வடங்களிற் எடுத்துரைப்பர்.

    முருகப்பெருமான் பரசிவத்தினின்றும் வேறல்லரென்னும் கொள்கையையுடைய இவ்வாசிரியர் கந்தர் கலிவெண்பாவில் பரசிவத்துக்குரிய இயல்புகளனைத்தையும் அக் கடவுளுக்கு அமைக்கின்றார்,

“மறைமுடிவில் நின்று நிறை செல்வன்”
(352),
“தனிமுத்திக் கொரு வித்தே”
(357),
“அறிவு ளறிவை யறிவு மவரு மறிய வரிய பிரமமே”
(408)
“அழியாத வீடுந் தரக்கடவன்”
(415),
என்பவற்றிலும் அக்கடவுள் பரசிவத்துக்குரிய இயல்புகளுடைமை புலப்படுத்தப் பெற்றுள்ளது.