(415)
என்னும்போது இவருக்கு அத்தெய்வத்தின்பாலுள்ள முறுகிய பக்தி புலனாகின்றது. அவ்வத் தெய்வங்களை தலைமையாக வைத்துப் பாராட்டும்போது அவற்றை உயர்வாகச் சிறப்பிக்கும் இம்முனிவர் பிரான் தியாகப்பெருமானைச் சொல்லுகையில்,
| “என்னுயிர்க் கொக்கு மிளஞ்சேயொ டேழுல கீன்றவன்னை |
| மன்னுயிர்க் கொக்குங் கமலைப்பிரான்” |
(326)
என்கின்றார். இங்கே பிறதெய்வத்தைப் புகழும்போதும், “என்னுயிர்க் கொக்கு மிளஞ்சேய்” என்று முருகப்பிரானைப் பாராட்டுமிதனால் அக்கடவுளை இவர் மறப்பினும் இவர்நா மறவாதென்பதை இவர் உணர்ந்துகொள்ளலாம்.
இம்முனிவர் பிரானுடைய நாமமாகிய குமரகுருபரரென்பது முருகக் கடவுளுக்குரிய திருநாமங்களுள் ஒன்றே. இவர் அப்பெயரால் அக்கடவுளை,