112குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

“அருள் குடி கொண்டகுமரகுருபரன்”
(400-4)
எனக் குறிக்கின்றார்.
    முருகப்பெருமானுக்கு வள்ளியம்மையோடு விளையாட்டுப் புரிவதிற் பெருவிருப்பம் உண்டு; அவ்விளையாடல்களைத் தண்டமிழ் மொழியிற் சுவைபடப்பாடுவது இம்மனிவருக்கு விருப்பம். எத்தனை விதமாக அவ்விளையாட்டை மனக் கண்ணாற் கற்பனை செய்து பார்க்கின்றார்! எத்தனைக் காட்சிகளைத் தம் செய்யுளோவியத்தில் அமைத்துக் காட்டுகின்றார்!

    “திருமகளைப் போலப் பேரழகுடன் தோன்றிய தேவயானையாகிய குமரி இருப்ப, மயில், நடனம் புரியும் குளிர்ந்த தினைப்புனம் நிறைந்த மலைச்சாரலிற் போயச் சிறுகுறவர் மகட்குச் சலாமிடற் கே்ககறு குமரன்” (6) என்று ஒரு முறை கூறுகின்றார்.

    “பூமேவு கற்பகப் பொங்கரிற் செங்கட் புலோமசை வளர்த்த தேவயானை விளையாடு பன்னிருபொருப்பன்” என்று முதலிற் கூறியவர் தொடர்ந்து, “விருப்பனைத்தும் கோமேவு சாரற் குறச் சிறுமி மேல் வைத்த குழகன்” (350) என்று புகழ்கின்றார்.

    அவர் கிழத்திருக்கோலங் கொண்டு வள்ளி நாயகிபாற் சென்று அவளை மணந்த செய்தியை,

“தெய்வ மக்ககோல மேமுதிர் கிழக்கோல மாய்க்குற
   மடந்தைமு னடந்துமற்றத்
திருக்கோல முடனொரு மணக்கோல
   மானவன்”
(360)
என்று அழகுபெற அமைக்கின்றார்.
    மும்முதற் கடவுளும் ஆதிப்பிரானென்று தம் அடித்தொழும் பாற்றி நிற்ப அவரோ,

“கூனேறு மதிநுதற் றெய்வக் குறப்பெண்
    குறிப்பறிந் தருகணைந்துன்
குற்றேவல் செய்யக் கடைக்கண் பணிக்கெனக்
    குறையிரந் தவடொண்டைவாய்த்
தேனூறு கிளவிக்கு வாயூறி”
(364)
நிற்கின்றார்.
“அம்பவளக்கொடி யேவளர்கொம்பே”
(368)
என்று தினைப்புனத்தில் உயிர் சோர்கின்றார்;