ஆராய்ச்சி113

“கனியொடு சுவையமு தொழுகிய சொற்பயி றத்தாய்வேள்
    கணையொடு பிணையென வுலவு கடைக்கண் மடப்பாவாய்
நனைமலர் பொதுளிய வெழிலி தழைத்த குழற்கோதாய்
    நளிர்புனமிசைவளர்கலபம்விரித்தமயிற்பேடே”
(355)
எனவும்,
“பொருகு சுவைத்தெளி நறவொழு க்ககனி கனியமுதே
   பிடிநடை கற்றிட வடிகள் பெயர்த்திடு மடவனமே
கருவரை நெக்குட னுருக மிழற்றுமொர் கிளியரசே
   கருணை செயத்தகு மளிய னிடத்து”
(438)
எனவும் பாராட்டி நிற்கின்றார்.
“இயலு நடையும் வடிவு மழகு மெழுத வரியன்”
(409)
ஆகிய அப்பெருமானை,
“அழகு கனிந்து முதிர்ந்த விளங்கனு”
(366)
என்று இவர் போற்றுகின்றார். எழுபற்கரிய அத்திருவுருவை முருகனடியார்கள்விழிகளிலும் மனத்திலும் எழுதி எழுதி இன்புறுவார்களென்பதை,

“வடிவி னழகு மெழுத வரிய புயமு நறிய செச்சையும்
     மருமம் விரவு குரவு மரையின் மணியு மணிகொள் கச்சையும்
கடவு மயிலு மயிலு மொழுகு கருணை வதன பத்மமும்
     கமல விழியும் விழியு மனமு மெழுதி யெழுதி நித்தலும்
அடிக ளெனவு னடிகள் பணியு மடியர்”
(399)
என்பதில் தெரிவிக்கின்றார். அவ்வடியார் குழுவில் ஒருவராகிய இவர் தம்முடைய முதற்பிரபந்தத்ததிலே செந்திற்பிரான் திருக்கோலத்தைக் கேசாதிபாதமாக வருணித்து உவக்கின்றார். பிறரால் எழுதுதற்கரிய முருகப்பிரான் திருவுருவை அடியர் தம் மனத்திலும் விழியிலுமெழுதுவர்; இவர் அவற்றோடு நில்லாது நாமும் ஓரளவு அனுபவிக்கும்படி தமது செய்யுளில் சித்தரித்து அமைத்து வைத்திருக்கின்றார்.

அம்மை

    உமாதேவியாரைப் பற்றிய செய்திகளாக இவர் கூறுவன வருமாறு:-

    அவ்வம்மை திருமாலுக்குத் தங்கையென்பது, இறைவன் நடனம் புரியும்போது அம்மை தாளங் கொட்டுவது, சதாசிவ மூர்த்தியின் துடையில் அம்மை வீற்றிருத்தல் (37), அம்மையின் கண்களிலிருந்து கலைமகளும் திருமகளும் உதித்தது (53).