114குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

அம்மையின் கலாபேதங்களுள் சந்திரனும் ஒன்று (64) திருமகளும் கலைமகளும் தேவியின் சேடியர், அம்மை கரும்பு வில்லையும் பஞ்ச பாணத்தையும் உடையவள். சந்திரமண்டலத்தில் வீற்றிருப்பவள் (70, 75), கலைமகள் அம்மையின் ஒருகூறு (95), சர்வம் சக்திமயம் (86. 362), அம்மை தன் திருக்கரத்திற் கிளியை ஏந்திரிருத்தல், சிவபெருமானுக்கு மனைவி தாய் டங்கை மகளென்று முறைகூறும் தொடர்புடையளாதல் (513), அம்மையன் கையில் கங்கை உதித்தது (539); இவற்றுட் சில தேவிக்குரிய நூல்களால் தெரியக்கூடியவை.

தல வரலாறுகள்

    பிற்காலத்தில் இந்நாட்டில் தலவழிபடு பெருகியது. தலங்களின் வரலாறுகளை அறிவதில் யாவரும் ஊக்கங் கொண்டனர். தலபுராணங்கள் பல உண்டாயின. புலவர்கள் தல சம்பந்தமான பிரபந்தங்களை இயற்றி அவற்றில் தல வரலாறுகளை அமைத்துக்காட்டினர். இத்தகைய காலத்தே அவதரித்த குமரகுருபரர் இயற்றிய நூல்களில் இரண்டையன்றி ஏனையவை தலங்களின் சார்புடையனவாகவே உள்ளன.

    தலச் செய்திகளை இவர் பலவகையிற் சமற்காரமாக அகத்துறையமைதிபெறவும் பிறவாறும் அமைப்பது முன்னமே கூறப்பட்டது.

    திருச்செந்தூரை அலைவாயென்றும், செந்திப்பதி யென்றும் கூறுகின்றனர்.

மதுரை

    மதுரைத் தலத்தின் பெருமையை அந்தத் தலத்தைச் சிறப்பிப்பதனாலும் அங்குள்ள திருக்கோயில் தீர்த்தம் என்பவற்றையும் மூர்த்திகளையும் சிறப்பிப்பதனாலும் வெளிப்படுத்துவர்.

    மதுரையின் திருநாமங்கள்: ஆலவாய், கடம்பவனம், கூடலம்பதி, சிவராசதானி, சீவன் முத்தித்தலம், துவாத சாந்ததத் தலம், நான்மாடக்கூடல், நீபவனம், மதுரைமூதூர், மாடக்கூடல்.

    அங்கே சங்கமிருந்தமையாலும் பல புலவர்கள் தமிழ் ஆராய்தற்கு இடமாக இருந்தமையாலும் அத்தலத்தைத் தமிழ் மதுரை, தண்டமிழ்க்கூடல், சங்கத் தமிழ்க் கூடல், முச்சங்கம்