(122)
என்பதனால் பொருட்சிறப்பும் உடையதென்பது கூறப்பட்டது.
அத்தலத்துத் தீர்த்தங்களாகிய வையையும், பொற்றாமரையும் புகழப்பெறுகின்றன. பொற்றாமரைத் தீர்த்தத்தைக் கனகமன்னுதட நளினி (13) என்பர். அங்கே சோமசுந்தரக் கடவுள் இந்திர விமானத்துள் எழுந்தருளியிருப்பதும், அவ்விந்திர விமானம் எட்டு யானைகளால் சுமக்கப் பெறுவதும், சொல்லப்படுகின்றன. வெள்ளியம்பலம், அறுகாற்பீட மென்பனவும், அத்தலத்திற் கோயில் கொண்டெழுந்தருளிய முருகக் கடவுள் திரு நாமமாகிய முத்துக்குமாரரென்பதும் குறிக்கப்படுகின்றன. அங்கே நிகழும் பிட்டுத் திருவிழா, தெப்பத் திருவிழா முதலியவற்றின் தொடர்புடைய செய்திகள் இடையிடையே வருகின்றன.
சோமசுந்தரக் கடவுளின் திருநாமங்கள்: அபிடேகச் சொக்கர், அழகிய சொக்கர், கடம்பவனச் சொக்கர், கடம்பவனேசர், கர்ப்பூரச் சொக்கர், கலியாண சுந்தரர், சவுந்தர மாறர், சுந்தரர், சொக்கப் பெருமான், சோமசுந்தரர், பழியஞ்சியார், புழுகுநெய்ச் சொக்கர், மதுரேசர் முதலியன.
சோமசுந்தரக் கடவுள் சுந்தர பாண்டியராக எழுந்தருளி அரசாண்டவராதலின் வரைச் சுந்தரமீனவன், சவுந்தரமாறன், கைதவக்களிறு எனப் பாராட்டுவதோடு, அவ்வரசிற் குரியனவாகிய வேப்பமாலை, மீனக்கொடி, கனவட்டமென்னுங் குதிரை (105) என்பவற்றையும் எடுத்து இசைப்பர்.
மீனாட்சி அம்மையின் திருநாமங்கள்: அங்கயற்கணம்மை, அணங்கரசு, அபிடேகவல்லி, அபிராமவல்லி, கயற்கட்குமாரி, கர்ப்பூரவல்லி, கவுரியர் குலமணி, குமரித் துறையவள், கோமகள், சங்க ம் வளர்ந்தட நின்றபொலன்கொடி, சுந்தரவல்லி,