ஆராய்ச்சி121

“புண்டரிக வீட்டிற் பொலிந்து மதுரச்
சொற்பொலி பழம்பாடல் சொல்லுகின்
     றவளுநின் சொருபம்”
(95)
என்று அம்பிகையை நோக்கிக் கூறும் செய்யுளால் கலைமகளைத் தேவியின் அம்சமாகவே இவர் கொண்டனரென்று தெரிய வருகின்றது. காளிதாசராகிய கவிஞர் அங்ஙனமே கொண்டனர். அதனால் அவ்வம்மையை மிகச் சிறப்பாக இவர் பாராட்டுகின்றார்.

    கலைமகள் வெண்டாமரையில் எழுந்தருளியிருத்தலும், பிரமன் நாவில் இருத்தலும், தொண்டர் நாவில் இருத்தலும், அன்பர்களுடைய கண்ணுங் கருத்தும் நிறைந்து இலங்குதலும் இவர் செய்யுட்களில் கூறப் பெறுகின்றன.

    அத்தேவியைக் கலைக்கொடி, சொற்கொடி, சொற்கடற் றெள்ளமுது, ஞானப்பிராட்டி யென்பர். அவள் ஞானத்தின் றோற்றமென்ன நிற்பவளென்றும், தெளிக்கும் கனுவற் புலவோரு கவிமழை சித்தக்கண்டு களிக்குங் கலாபமயிலென்றும், நூற்பெருங் கடலுள் நுண்பொருள் தெரித்து நாற்பயன் கொள்ளும் நாமகளென்றும், கல்விப் பெருஞ் செல்வப் பேறென்றும் பொதுவகையில் கல்விக்குத் தெய்வமாதலை எடுத்துரைத்தும், தமிழொடுந் தொன்மறை தெளிக்குங் கலைக்கொடி, முதுபாட லெழுதாமறையோடும் இசைமுத் தமிழ்பாடும் இளமான், வடநூற் கடலுந் தமிழ்ச் செல்வமும் காப்பவளென்றும் இரு மொழிக்கும் உரிமையுடையளாதலை விளக்கியும்,

“தெள்ளித் தெளிக்குந் தமிழ்க்கடலி னன்பினைந்
     திணையென வெடுத்த விறைநூற்
றெள்ளமுது கூட்டுணுமொர் வெள்ளோதிமம்”
(10)
     “மதுர மொழுகுங்
கொழிதமிழ்ப் பனுவற் றுறைப்படியு மடநடைக்
     கூந்தலம்பிடி”
(55)
என்பவற்றில் தமிழின்பால் தனியுரிமை பூண்டிருத்தலைச் சிறப்பித்தும் செல்கின்றார்.

“நளினப் பொகுட்டெமது நன்னெஞ்செனக்
     குடிபுகும் ஞானப் பிராட்டி”
(357)
என்பதில் கலைமகள் தம் நெஞ்சிலும்,