பக்கம் எண் :

76குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

முடம்பட்ட மதியங் குசப்படை யெனக்ககன
   முகடுகை தடவியுடுமீன்
முத்தம் பதித்திட்ட முகபடா மெனவெழு
   முகிற்படா நெற்றிசுற்றும்

கடம்பட்ட சிறுகட் பெருங்கொலைய மழவிளங்
   களிநீன்ற பிடிவருகவே
கற்பகா டவியிற் கடம்பா டவிப்பொலி
   கயற்கணா யகிவருகவே.    
(4)

58.
தேனொழுகு கஞ்சப் பொலன்சீ றடிக்கூட்டு
   செம்பஞ்சி யின்குழம்பாற்
றெள்ளமு திறைக்கும் பசுங்குழவி வெண்டிங்கள்
   செக்கர்மதி யாக்கரை பொரும்  

வானொழுகு துங்கத் தரங்கப் பெருங்கங்கை
   வாணிந்தி யாச்சிவபிரான்
மகுடகோ டீரத் தடிச்சுவ டழுத்தியிடு
   மரகதக் கொம்பு கதிர்கால்

மீனொழுகு மாயிரு விசும்பிற் செலுங்கடவுள்
   வேழத்தின் மத்தகத்து
வீற்றிருக் குஞ்சே யிழைக்கும் பசுங்கமுகு
   வெண்கவரி வீசும்வாசக்

    (3) மதியை அங்குசமாகிய தன் ஆயுதமென்று எண்ணி, மேகத்திற்கு முகபடாமும் நட்சத்திரங்களுக்கு அதிற் பதித்த முத்துக்களும் உவமை.

    (4) களிறு - விநாயகரை. (பி-ம்.) ‘கன்றீன்ற;.

    58. (அடி, 1-2) சிவபெருமான் அம்பிகையின் ஊடலை நீக்கும் பொருட்டு வணங்கும்போது அவள் திருவடியிலுள்ள செம்பஞ்சுக் குழம்பு பட்டு இறைவன் திருமுடியிலுள்ள பிறையும் கங்கையும் செந்நிறத்தை அடைதல் கூறப்படும். கஞ்சம் போன்ற சீறடி. பசுங்குழவி வெண்டிங்கள்; 498. செக்கர்மதி - சிவப்பு நிறமுள்ள சந்திரன். வாணி நதி செந்நிறமுடையது. மகுட கோடீரம் - மகுடமாகிய சடை. மரகதக் கொம்பு; விளி.

    (3) சேயிழை - இந்திராணி. (பி-ம்.) ‘வேழத்து’ கமுகமரம் தன் பாளையால் இந்திராணிக்கு வெண்கவரி வீசியது.