| கானொழுகு தடமலர்க் கடிபொழிற் கூடல்வளர் | | கவுரியன் மகள்வருகவே | | கற்பகா டவியிற் கடம்பா டவிப்பொலி | | |
வேறு 59. | வடக்குங் குமக்குன் றிரண்டேந்தும் | | வண்டன் மகளிர் சிறுமுற்றில் | | வாரிக் குவித்த மணிக்குப்பை | | வானா றடைப்ப வழிபிழைத்து |
| நடக்குங் கதிர்பொற் பரிசிலா | | நகுவெண் பிறைகைத் தோணியா | | நாண்மீன் பரப்புச் சிறுமிதப்பா | | நாப்பண் மிதப்ப நாற்கோட்டுக் |
| கடக்குஞ் சரத்தின் மதநதியும் | | கங்கா நதியு மெதிர்கொள்ளக | | ககன வெளியுங் கற்பகப்பூங் | | காடுங் கடந்து கடல்சுருங்க |
| மடுக்குந் திரைத்தண் டிறைவைகை | | வளநாட் டரசே வருகவே | | மலயத் துவசன் பெற்றபெரு | | |
(4) கவுரியன் - பாண்டியன்.
59. வையைநதியின் வெள்ளநீர் வானளாவி வரும் நிலை சொல்லப்படும்.
(அடி, 1) குங்குமக் குன்று - நகில்கள். வண்டல் மகளிர் - சிற்றில் விளையாடல் புரியும் பெண்கள். முற்றில் - சிறுசுளகால்,. வானாறு அடைப்ப - ஆகாய வழியை அடைத்தலினால். வழி பிழைத்து - செல்லும் கதி மாறி.
(2) கதிர் - சூரியன். பொற்பரிசிலா - பொன்னாலாகிய பரிசிலாகவும்; பிறை கைத்தோணியா - பிறை சிறு தோணியாகவும் (432, 533.) நாண்மீன் - நட்சத்திரம். மிதப்பு - ஒரு மரத்தோணி.
(3) குஞ்சரம் - ஐராவதம்.
(4) (பி-ம்.) ‘மடக்கும்.’
(முடிபு.) குப்பை அடைப்பப் பிழைத்து நடக்கும் கதிர்; கதிர் பரிசிலாகவும் பிறை தோணியாகவும் மீன் பரப்பு மிதப்பதாகவும் மிதப்ப. மதநதியும் கங்காநதியும் எதிர்கொள்ளக் கடந்த கடல் சுருங்க மடுக்கும் வைகையென்க.
|