பக்கம் எண் :

78குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

60.
சுண்ணந் திமிர்ந்து தேனருவி
   துளைந்தா டறுகாற் றும்பிபசுந்
தோட்டுக் கதவந் திறப்பமலர்த்
   தோகை குடிபுக் கோகைசெயும்

தண்ணங் கமலக் கோயில்பல
   சமைத்த மருதத் தச்சன்முழுத்
தாற்றுக் கமுகு நாற்றியிடும்
   தடங்கா மணப்பந் தரில்வீக்கும்

விண்ணம் பொதிந்த மேகபடாம்
   மிசைத்தூக் கியபன் மணிக்கொத்து
விரிந்தா லெனக்கா னிமிர்ந்துதலை
   விரியுங் குலைநெற் பற்றைபல

வண்ணம் பொலியும் பண்ணைவயல்
   மதுரைக் கரசே வருகவே
மலயத் துவசன் பெற்றபெரு
   வாழ்வே வருக வருகவே.    
(7)

61.
தகரக் குழலி னறையுநறை
   தருதீம் புகையுந் திசைக்களிற்றின்
தடக்கை நாசிப் புழைமடுப்பத்
   தளருஞ் சிறுநுண் மருங்குல்பெருஞ்

    60. மருதநிலவளம் கூறப்படும்.

    (அடி, 1) திமிர்ந்து - பூசி. (பி-ம்.) ‘சுண்ணந்துதைந்து’. தோடு கதவம் - இதழாகிய கதவு. மலர்த்தோகை - திருமகள்.

    (2) மருதநிலமாகிய தச்சன். முழுத்தாற்றுக் கமுகு - நன்றாக முதிர்ந்த காய்க்குலையையுடைய கமுக மரங்களை. நாற்றி - தொங்கக்கட்டி. பந்தர்க்காலில் கமுக மரத்தைக் குலையுடன் கட்டுதல் வழக்கமாதலின் இவ்வாறு கூறினார். தடங்கா மணப்பந்தர் - பெரிய சோலையாகிய மணப்பந்தல். (பி-ம்.) ‘காவணப் பந்தர்’. வீக்கும் - கட்டிய. (பி-ம்.) ‘பந்தரிற்கட்டும்.’

    (3) மேகபடாம் - மேகமாகிய மேற்கட்டி (வில்லி பா. அருச்சுனன் தீர்த்த. 51.) படாம் - இங்கே மேற்கட்டி. நெற்கற்றைக்கு மேற்கட்டியிலிருந்து நாலவிட்ட மணிக்கொத்து உவமை.

    61. (அடி, 1) தகரம் - மயிர்ச் சாந்து. நறை - இயற்கை மணம். நறைதரு தீம்புகை - அகிற்புகை முதலியன; நறை - நறைக்கொடியுமாம்; (சீவக. 131. ந.) கையாகிய நாசி; “மூரியேழ்கட லுந்தரு மூக்கின” (தக்க.273) என்பதன் அடிக்குறிப்பைப் பார்க்க. “பரிமள கந்தம், மருப்புடைப் பொருப்பேர் மாதிரக் களிற்றின் வரிக்கைவாண் மூக்கிடை மடுப்ப” (கம்ப. நிந்தனைப். 2.) மருங்குல் - இடை; எழுவாய்.