பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்79

சிகரக் களபப் பொம்மன்முலைத்
   தெய்வ மகளிர் புடையிரட்டும்
செங்கைக் கவரி முகந்தெறியும்
   சிறுகாற் கொசிந்து குடிவாங்க

முகரக் களிவண் ட்டைகிடக்கும்
   முளரிக் கொடிக்குங் கலைக்கொடிக்கும்
முருந்து முறுவல் விருந்திடுபுன்
   மூர னெடுவெண் ணிலவெறிப்ப

மகரக் கருங்கட் செங்கனிவாய்
   மடமான் கன்று வருகவே
மலயத் துவசன் பெற்றபெரு
   வாழ்வே வருக வருகவே.    
(8)

62.
தொடுக்கும் கடவுட் பழம்பாடற்
   றொடையின் பயனே நறைபழுத்த
துறைத்தீந் தமிழி னொழுகுநறுஞ்
   சுவையே யகத்தைக் கிழங்கையகழ்ந்

தெடுக்குந் தொழும்ப ருளக்கோயிற்
   கேற்றும் விளக்கே வளர்சிமய
இமயப் பொருப்பில் விளையாடும்
   இளமென் பிடியே யெறிதரங்கம்

    (1-2) புடை - பக்கத்தில். இரட்டும் - மாறி வீசும். சிறு கால் - மெல்லிய காற்று. ஒசிந்து - தளர்ந்து. குடிவாங்க - வேற்றிடம் பார்க்க. மருங்குல் சிறு காற்றுக்கு ஒசிதல்; “ஈக்காற்றுக் காற்றா விடை” (தனிப்.)

    (3) முகரம் - ஒலி. முளரிக்கொடி; திருமகள். கலைக்கொடி - கலைமகள். முருந்து - மயிலிறகின் அடிக்குருத்து. முறுவல் - பல். புன்மூரல் - புன்னகை.

    (4) மகரக் கருங்கண்: 19.

    (முடிபு.) நறையும் புகையும் மடுப்ப, மருங்குல் ஒசிந்து குடிவாங்க, முறுவல் நிலவெறிப்ப வருக வென்க.

    62. (அடி, 1) கடவுட் பழம் பாடல் - வேதம் (1;1, 44, 430.) நறை-தேன். துறைத் தீந்தமிழ் - அகமும் புறமுமாகிய துறைகளையுடைய இனிய தமிழ். அகந்தை - ஆணவம்.

    (2) தொழும்பர் அடியார். “தொண்டர்மானத்த் தடமலர்ப் பொற்கோயில் குடிகொண்ட மாணிக்கவல்லி” என்றார் முன்னும் (55). சிமயம்-சிகரம். பொருப்பென்றதற்கேறபப்பிடி என்றார்.