65. | குலத்தோடு தெய்வக் குழாம்பிழிந் தூற்றிக் | | குடித்துச் சுவைத்துமிழ்ந்த | | கோதென்று மழல்விடங் கொப்புளிக் கின்றவிரு | | கோளினுச் சிட்டமென்றும் |
| கலைத்தோடு மூடிக் களங்கம் பொதிந்திட்ட | | கயரோகி யென்றுமொருநாள் | | கண்கொண்டு பார்க்கவுங் கடவதன் றெனவும் | | கடற்புவி யெடுத்திகழவிட் |
| புலத்தோடு முடுமீன் கணத்தோடு மோடுநின் | | போல்வார்க்கு மாபாதகம் | | போக்குமித் தலமலது புகலில்லை காண்மிசைப் | | பொங்குபுனல் கற்பக்ககா |
| டலைத்தோடு வைகைத் துறைப்படி மடப்பிடியொ | | டம்புலீ யாடவாவே | | ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியிடன் | | |
65. சந்திரனுடைய குறைகள் நீங்குமென்பது கூறப்படும்.
(அடி, 1)தெய்வக்குழாம் - தேவர்களின் தொகுதி; தேவர்கள் சந்திரகிரணத்தை உண்பரென்றல் மரபு; “பிறைவளர் நிறைமதி யுண்டி, அணிமணிப் பைம்பூ ணமர்ர்க்கு”. “உலகுபயம் பகர வோங்குபெரும் பக்கம், வழியது பக்கத்தமர ருண்டி, மதி” (பரி. 3:52.11:34-6.) கோது - சக்கை. இருகோள் - இராகு கேதுக்கள். உச்சிட்டம் - எச்சில்.
(2) கலைத்தோடு - கலைத்தொகுதி; ஆடையின் தொகுதியென்பது வேறு பொருள்; கலை: சிலேடை (66.) களங்கம் - சந்திரனித்துள்ள கறுப்பு. கயரோகி - க்ஷயரோகத்தை யுடையவன்; என்றது உடல் தேய்வது கருதிக் கூறியது. ஒரு நாள் - விநாயக சதுர்த்தி; அன்று சந்திரனைப் பார்த்தல் கூடாதென்பர்; “சிங்கமா மதியிடைச் சேர்முன் பக்கத்துத், தங்குநஞ் சதுர்த்தியிற் றன்னைக் காணற்க, மங்குல்வான் முன்புபோன் மற்றை நாளெலாம், அங்கவ னுருவினை யாருங்காண்கவே” (விநாயக. சந்திரன் அனுட்டித்த. 21.)
(3) ஒருவனுடைய மாபாதகத்தை ஸ்ரீ சோமசுந்தரக் கடவுள் இங்கே போக்கியருளினர்; இதனை மாபாதகம் தீர்த்த திருவிளையாதலால் உணரலாகும். புகல் - அடைக்கலத் தானம்.
|