பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்83

66.
கீற்றுமதி யெனநிலவு தோற்றுபரு வத்திலொளி
   கிளர்நுதற் செவ்விவவ்விக்
கெண்டைத் தடங்கணா ரெருவிட் டிறைஞ்சக்
   கிடந்தது முடைந்தமுதம்விண்

டூற்றுபுது வெண்கலை யுடுத்துமுழு மதியென
   உதித்தவம யத்தும்மமை
ஒண்முகத் தொழுகுதிரு வழகைக் கவர்ந்துகொண்
   டோடினது நிற்கமற்றை

மாற்றவ ளொடுங்கேள்வர் மௌலியி லுறைந்ததும்
   மறந்துனை யழைத்தபொழுதே
மற்றிவள் பெருங்கருணை சொற்றிடக் கடவதோ
   மண்முழுதும் விம்முபுயம்வைத்

தாற்றுமுடி யரசுதவு மரசிளங் குமரியுடன்
   அம்புலீ யாடவாவே
ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன்
   அம்புலீ யாடவாவே.    
(3)

67.
விண்டலம் பொலியப் பொலிந்திடுதி யேலுனது
   வெம்பணிப் பகைவிழுங்கி
விக்கிடக் க்ககிடத் தொக்கிடர்ப் படுதிவெயில்
   விரியுஞ் சுடர்ப்பருதியின

    66. சந்திரனிடத்து அம்பிகைக்குக் கோபம் உண்டாதற்குரிய காரணங்கள் சில கூறப்படும்.

    (அடி, 1) கீற்றுமது - பிறை. ஸஸ்யாதிபதியென்று மதி கூறப்படுமாதலின் அவனை எருவிட்டிறைஞ்சுதல் மரபென்பர் (189.)

    (2) கலை - கிரணம், ஆடை; சிலேடை.

    (3) மாற்றவள் - கங்கை.

    (4) ஆற்று - தாங்கும். முடியரசு - மலையத்துவச பாண்டியன்.

    67. சந்திரன் அடையும் துன்பங்கள் சில கூறப்படும்.

    (அடி, 1-2) வெம்பணிப்பகை - வெவ்விய பாம்புகளாகிய பகை; இராகு கேதுக்கள் (65,) தொக்கு - சேர்ந்து. அமாவாசையில் சூரியனும் சந்திரனும் சேர்தலை நினைந்து, சூரிய மண்டலம் புக்க காலையில் ஒளி மழுங்கு மென்றார்; “இந்துவோ டிரவி கூட்ட மமாவாசை” (சூடா. தெய்வப்.) எந்தை - சிவபெருமான். மாசுணம் - அவர் திருமுடியிலணிந்த பாம்பு.