| மண்டலம் புக்கனை யிருத்தியெனி னொள்ளொளி | | மழுங்கிட வழுங்கிடுதிபொன் | | வளர்சடைக் காட்டெந்தை வைத்திடப் பெறுதியேல் | | மாசுணஞ் சுற்றவச்சம் |
| கொண்டுகண் டுஞ்சா திருப்பது மருப்பொங்கு | | கோதையிவள் சீறடிகணின் | | குடர்குழம் பிடவே கூமைப்பதும் பெறுதியெங் | | கோமாட்டி பாலடைந்தால் |
| அண்டபகி ரண்டமு மகண்டமும் பெறுதியால் | | அம்புலீ யாடவாவே | | ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன் | | |
68. | எண்ணில்பல புவனப் பெருந்தட்டை யூடுருவி | | இவள் பெரும் புகழ்நெடுநிலா | | எங்கணு நிறைந்திடுவ தங்கதனின் மெள்ளநீ | | எள்ளளவு மொண்டுகொண்டு |
| வெண்ணிலவு பொழிவது கிடைத்தனை மடுத்திவள் | | விழிக்கடை கொழித்தகருணை | | வெள்ளந் திளைத்தாடு பெற்றியாற் றண்ணளி | | விளைப்படும் பெற்றனைகொலாம் |
| மண்ணிலொண் பைங்கூழ் வளர்ப்பது னிடத்தம்மை | | வைத்திடுஞ் சக்தியேகாண் | | மற்றொரு சுதந்தர நினக்கென விலைக்கலை | | மதிக்கடவு ணீயுமுணர்வாய் |
(3) குமைப்பது - உதைப்பது; இஃது ஊடற்கட் செயல். துஞ்சா திருப்பதும் குமைப்பதும் பெறுதி. (4) அண்டமும் பகிரண்டமுமாகிய அகண்டமும்; அகண்டம் - முழுவதும்.
68. (அடி, 1) தட்டு - அடுக்கு. (3) பைங்கூழ் - பசிய பயிர். சந்திரன் ஸஸ்யாதிபதியாதலின் பைங்கூழை வளர்ப்பதாகக் கூறினார் (71.)
|