| அண்ணலங் களியானை யரசர்கோ மகளுடன் | | அம்புலீ யாடவாவே. | | ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன் | | |
69. | முன்பும்ப ரரசுசெய் பெரும்பாவ முங்கோவ | | மூரிமாத் தொடர்சாவமும | | மும்மைத் தமிழ்ச்செழியன் வெப்பொடு கொடுங்கூனும் | | மோசித்த வித்தலத்தின் |
| தன்பெருந் தன்மையை யுணர்ந்திலைகொல் சிவராச | | தானியாய்ச் சீவன்முத்தித் | | தலமுமாய்த் துவாதசாந் தத்தலமு மானதித் | | தலமித் தலத்தடைதியேல் |
| மன்பெருங் குரவற் பிழைத்தபா வமுமற்றை | | மாமடிக ளிடுசாவமும் | | வளரிளம் பருவத்து நரைதிரையு முதிர்கூனும் | | மாற்றிடப் பெறுதிகண்டாய் |
| அன்பரென் புருகக் கசிந்திடு பசுந்தேனோ | | டம்புலீ யாடவாவே | | ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன் | | |
69. மதுரையின் சிறப்பும் அதனை அடைந்தால் சந்திரன் அடையும் பேறுகளும் கூறப்படும்.
(அடி, 1) உம்பர் அரசு - இந்திரன். (பி-ம்.) ‘முன்பெரும் பாவி செய்’. மூரிமா - வலியையுடைய யானையாகிய ஐராவதம். சாவம் - சாபம்: (பி-ம்.) ‘சாபமும்’. மும்மைத் தமிழ் - முத்தமிழ். செழியன் - கூன்பாண்டின். வெப்பு - கரம். மோசித்த - நீக்கிய (1 : 120.)
(2) சிவராசதானி: “சீர்கொண்ட கூடற் சிவராச தானி”, “திருமதுரை, தானே சிவராச தானி” (தமிழ்விடு. 1265-6.) சீவன் முத்தித்தலம், துவாதசாந்தத்தலம்: திருவிளை. தலவிசேடப். 21.
(3) குரவன் - பிருகஸ்பதி. மாமடிகள் - மாமனார் (547.) தக்கன் இடு சாபம்: சந்திரன் உரோகிணியிடத்து மிக்க விருப்புடையவமாகியிருந்து மற்ற மனைவியரைப் புறக்கணித்தமையின், கலை குறைகவென்று தக்கன் சாபமிட்டானென்பது வரலாறு (கந்த. சந்திரசாப்ப்.)
(4) அன்பர் என்புருகக் கசிந்திடுதேன்: 76.
|