70. | கும்பஞ் சுமந்தமத வெள்ளநீர் கொட்டும் | | கொடுங்களி றிடும்போர்வையான் | | குடிலகோ டீரத் திருந்துகொண் தந்நலார் | | கொய்தளிர்க் கைவருடவும் |
| செம்பஞ் சுறுத்தவும் பதைபதைத் தாரழற் | | சிகையவனக் கொப்புளிக்கும் | | சீறடிகள் கன்றிச் சிவந்திடச் செய்வதும் | | திருவுளத் தடையாதுபொற் |
| றம்பஞ் சுமந்தீன்ற மானிட விலங்கின் | | தனிப்புதல்வ னுக்குவட்டத் | | தண்குடை நிழற்றுநினை வம்மென வழைத்தனள் | | தழைத்திடு கழைக்கரும் பொன் |
| றம்பஞ் சுடன்கொண்ட மகரக் கொடிக்கொடியொ | | டம்புலீ யாடவாவே. | | ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன் | | |
71. | துளிதூங்கு தெள்ளமுத வெள்ளருவி பொழியுநின் | | தொன்மரபு தழையவந்து | | தோன்றிடுங் கௌரியர் குலக்கொழுந் தைக்கண்டு | | துணைவிழியு மனமுநின்று |
70. அம்பிகை சந்திரன்பாற் சினங்கொள்ளுதற்குரிய ஏதுக்கள் இருப்பவும் அவள் அவற்றை மறந்து அழைத்ததனளென்ற செய்தி சொல்லப்படும்.
(அடி, 1) போர்வையான் - சிவபிரான். குடில கோடீரம் - வட்டமான சடை.
(1-2) அந்தலார் - தேவியின் தோழிகள், இருந்துகொண்டு செய்வதும் என்க. அடையாது - கொள்ளாமல்.
(3) மானிட விலங்கு - நரசிங்கம். புதல்வன் - காமன்.
(3-4) கரும்புவில்லும் பஞ்சபாணமும் அம்பிகைக்கு உரியன (75.)
71. சந்திரனுடைய இழிவு கூறப்படும்.
(அடி, 1) கௌரியர் - பாண்டியருடைய: குலக்கொழுந்து - அம்பிகை.
|