பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்87

களிதூங்கு வளவளாய் வாழாம லுண்ணமுது
   கலையொடு மிழந்துவெறுமட்
கலத்திடு புதுக்கூழி னுக்கிரவு பூண்டொரு
   களங்கம்வைத் தாயிதுவலால்

ஒளிதூங்கு தெளிவிசும் பினினின்னோ டொத்தடவன்
   ஒருத்தன் கரத்தின்வாரி
உண்டொதுக் கியமிச்சி னள்ளிருளி லள்ளியுண்
   டோடுகின் றாயென்செய்தாய்

அளிதூங்கு ஞிமிறெழுந் தார்க்குங் குழற்றிருவொ
   டம்புலீ யாடவாவே.
ஆணிப்பொன் வில்லுபுணர் மாணிக்க வல்லியுடன்
   அம்புலீ யாடவாவே.    
(8)

72.
மழைக்கொந் தளக்கோதை வம்மென்ற வளவினீ
   வந்திலை யெனக்கடுகலும்
வாண்முகச் செவ்விக் குடைந்தொதுங் கினவனெதிர்
   வரவொல்கி யோபணிகள்கோள்

இழைக்குங்கொல் பின்றொடர்ந நெனவஞ்சி யோதாழ்த்
   திருந்தனன் போலுமெனயாம்
இத்துணையு மொருவாறு தப்புவித் தேம்வெகுளின்
   இனியொரு பிழைப்பில்லைகாண்

    (2) அமுது கலையொடும் இழந்து - அமிர்தத்தைக் கிரணங்களோடு இழந்து; உணவையும் உடையையும் இழந்தென்பது வேறுபொருள். மட்கலத்திடு புதுக்கூழினுக்கு இரவு பூண்டு - பூமியில் உண்டாகின்ற புதிய பயிர்களின் பொருட்டு இராக்காலத்தின் தலைமையைப் பூண்டு; மண்பாண்டத்தில் இடும் புதிய கூழுணவின் பொருட்டு இரத்தலை மேற்கொண்டென்பது வேறு பொருள. களங்கம் - கறுப்பு, வசை. (பி-ம்.) ‘வைத்தாயி தல்லால்.’

    (3) ஒருத்தன் - சூரியன். கரம் - கிரணம், கை. நள்ளிருள் - இரவு. சூரியனிடத்திலிருந்து பெற்றுச் சந்திரன் ஒளியை வீசுகின்றானென்பராதலின் இங்ஙனம் கூறினார்.

    (4) அளியும் ஞிமிறும் ஆர்க்கும்.

    72. (அடி, 1) கொந்தளக் கோதை - கூந்தலையுடைய அம்பிகை; கோதை - மாலைபோல்வாள்; உவமவாகுபெயர். (பி-ம்.) ‘வம்மினென்றளவினீ’. கடுகல் - கோபித்தல். ஒல்கியோ - தளர்ந்தோ. பணிகள் - இராகு கேதுக்கள்.

    (2) பிழைப்பு - தப்பும் வகை.