| தழைக்குந் துகிற்கொடி முகிற்கொடி திரைத்துமேற் | | றலம்வளர் நகிற்கொடிகளைத் | | தாழ்குழலு நீவிநுதல் வெயர்வுந் துடைத்தம்மை | | சமயமிது வென்றளுவளிட் |
| டழைக்குந் தடம்புரிசை மதுரைத் துரைப்பெணுடன் | | அம்புலீ யாடவாவே | | ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன் | | |
73. | ஏடகத் தெழுதாத வேதச் சிரத்தர | | சிருக்குமிவள் சீறடிகணின் | | இதயத் தடத்தும் பொலிந்தவா திருவுளத் | | தெண்ணியன் றேகபடமா |
| நாடகத் தைந்தொழி னடத்தும் பிரான்றெய்வ | | நதியொடு முடித்தல்பெற்றாய் | | நங்கையிவ டிருவுள மகிழ்ச்சிபெறி னிதுபோலொர் | | நற்றவப் பேறில்லைகாண் |
(3) துகிற்கொடி எழுவாய். முகிற்கொடி - மேகத்தின் ஒழுங்கினை. திரைத்து - சுருட்டி. மேற்றலம் - விண்ணுலகம். நகிற் கொடிகள் - தெய்வ மகளிர். அம்மை சமயம் - அம்பிகை தரிசனம் அளித்தற்குரிய செவ்வி. அலுவலிட்டு - வேலையில் ஏவி.
(4) துரைப் பெண்: 29.
73. (அடி, 1) வேதச்சிரம் - உபநிடதம். சந்திரனிடத்து அம்பிகை எழுந்தருளியிருப்பதாக நூல்கள் கூறும்; “மதி மண்டலத் தமுத மாயம்மை தோன்றுகின்றதும்” (95); ‘சந்திர மண்டல மத்யகா’ என்பது லலிதா ஸஹஸ்ரநாமம் (240.)
(1-2) கபடமா நாடகத்து ஐந்தொழில் நடத்தும் பிரான் - புறத்தார்க்குப் புலப்படாத உட்கருத்தையுடைய தன் நடனத்தில் ஆக்கல் முதலிய ஐந்தொழிலையும் புரியும் பெருமான்; நாடகம் - கூத்தென்னும் துணையாய் நின்றது. சிவபிரானது திருநடனக்கோலம் ஐந்தொழிலையும் நடத்துதற்குரிய அடையாளமாக நிலவுவதென்பது உண்மை விளக்கம் முதலிய நூல்களால் அறியப்படும். (பி-ம்.) ‘ஐந்தொழி னடிக்கும்பிரான்’.
|